92. பௌத்ர: to ப்ரக்3ருஹீத

1821. பௌத்ர: = மகனின் மகன்.

1822. பௌத்ரீ = மகனின் மகள்.

1823. பௌராணிக: = புராண அறிவு உடையவன், புராணம் சொல்பவன்.

1824. பௌருஷம் = மனித முயற்சி, வீரம், ஆண்மை.

1825. ப்ரகடனம் = வெளிப்படுத்துதல், தெளிவாக்குதல்.

1826. ப்ரகரணம் = நிரூபித்தல், விவரித்தல், காலம் , தருணம், விஷயம்.

1827. ப்ரகர்ஷ: = மேன்மை, வலிமை, சக்தி, விசேஷத் தன்மை.

1828. ப்ரகாண்ட3: = ப்ரகாண்ட3ம் = அடிமரம், கிளை, தளிர்.

1829. ப்ரகார: = முறை, வழி, ரீதி, சமமான தன்மை, பலவிதமான.

1830. ப்ரகாஷ: = காந்தி, ஒளி, பளபளப்பு, விவரித்தல், காட்டுதல்.

1831. ப்ரகாஷக: = பிரகாசிக்கச் செய்பவன், சூரியன், பதிப்பாளர்.

1832. ப்ரகீர்ண = சிதறிய, பரப்பப்பட்ட, களைப்புற்ற, கலங்கிய, குழம்பிய, பலவகையான, கலந்த.

1833. ப்ரக்ருத = பூர்த்தியான, நிறைவேற்றப்பட்ட, தொடங்கப்பட்ட, நியமிக்கப்பட்ட, உண்மையான, மேன்மை நிறைந்த.

1834. ப்ரக்ருதி : = இயற்கை நிலை, இயற்கையான ஸ்வபாவம், இயற்கையான உருவம், மாயை, உருவம், பூமி, மூல காரணம்.

1835. ப்ரக்ருஷ்ட = மேலான, ச்ரேஷ்டமான, நீண்ட, அமைதியற்ற, இழுத்து வெளியே தள்ளப்பட்ட, களைத்துப்போன.

1836. ப்ரகோஷ்ட: = முன்னங்கை, முற்றம்.

1837. ப்ரக்ரம : = காலடி, சுவடு, போக்கு, ஒழுங்கு, முறை, அளவு, தருணம், ஓய்வு.

1838. ப்ரக்ரியா = முறை, உயர்வு, அதிகாரம், அத்தியாயம்.

1839. ப்ரக்யா = ப்ரக்யாதி: = புகழ், கீர்த்தி, நன்கு அறியப்படுவது.

1840. ப்ரக்3ருஹீத = பிடிக்கப்பட்ட, அடையப்பட்ட , ஒப்புக் கொள்ளப்பட்ட.

2 thoughts on “92. பௌத்ர: to ப்ரக்3ருஹீத

Leave a Reply to vsthirumalai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *