3461. ச்’வச்’ரூ: = மாமியார்.
3462. ச்’வஸ் = சுவாசித்தல், பெருமூச்சுவிடுதல், மூச்சு திணறல், இரைத்தல்.
3463. ச்’வஸ் = நாளை, மறுநாள், வருங்காலத்தில்.
3464. ச்’வஸனம் = மூச்சு.
3465. ச்’வாஸ: = காற்று, மூச்சு, பெருமூச்சு.
3466. ச்’வேத = வெண்மையான.
3467. ச்’வேத: = வெண்மை வர்ணம், சுக்ரன், சோழி, சங்கு, வெண்மேகம், ஜீரகம்.
3468. ச்’வேதம் = வெள்ளி.
3469. ச்’வேதச்ச2த3: =அன்னப் பறவை, வெண் துளசி.
3470. ச்’வேதா = வெண் நொச்சி, சோழி, வெண் அருகம் புல், படிகம்.
3471. ச்’வேதா = வெண் நொச்சி, சோழி, வெண் அருகம் புல், படிகம்.
3472. ஷட்கம் = ஆறு கொண்டது.
3473. ஷட்கர்மன் = அந்தணனுக்கு விதிக்கப்பட ஆறு கர்மங்கள்.
3474. ஷட்கோணம் = அறுகோணம்.
3475. ஷட்சக்ரம் = உடலில் உள்ள ஆறு சக்கரங்கள் (மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞா)
3476. ஷட்பத3: = ஷட்சரண: = தேனீ, வண்டு, பேன்.
3477. ஷட்பதீ3 = ஆறு வரிகள் கொண்ட செய்யுள், பெண் வண்டு.
3478. ஷட்3வக்தர: = ஷட்3வத3ன: = ஷடா3னன: = ஷண்முக2: = ஷண்மாதுர: = முருகன், ஆறுமுகக் கடவுள்.
3479. ஷண்ட3: = எருது, பேடி, ஆண்மையற்றவன், கூட்டம், குவியல்.
3480. ஷஷ் = ஆறு என்னும் எண் உரிச்சொல்.