169. சீ’ர்ண to சு’ப்4ர

3361. சீ’ர்ண = குறைந்து போன, மெலிந்த, ஒடிந்த, காய்ந்த, அழுகின, வீணான.

3362. சீ’ர்ஷம் = தலை, மண்டையோடு, இரும்புத் தொப்பி, தலைப்பாகை, குல்லாய், தீர்ப்பு, தலையங்கம்.

3363. சீ’லம் = இயற்கை, ஒழுங்கு, ஸ்வபாவம், நடத்தை, நற்குணம், அழகு, நல்ல உருவம் கொண்டிருப்பது.

3364. சு’க: = கிளி, சுக முனிவர்.

3365. சு’க்தி: = சிப்பி, முத்துச் சிப்பி, சங்கு, குதிரையின் பிடரி மயிர்.

3366. சு’க்ர: = சுக்ரன், சுக்ராச்சாரியார், நெருப்பு, அக்னி.

3367. சு’க்ரம் = வீர்யம்.

3368. சு’க்ரவார: = வெள்ளிக் கிழமை.

3368. சு’க்ல = வெண்மையான, சுத்தமான, பிரகாசமான.

3370. சு’க்லம் = வெள்ளி, புது வெண்ணை, கஞ்சி, வெளிச்சம்.

3371. சு’சி = சுத்தமான, நிர்மலமான, வெண்மையான, பிரகாசமான, புனிதமான, உண்மையான.

3372. சு’சி: = புனிதத் தன்மை, சுத்தம், உண்மையான நடத்தை, குற்றமற்றது, வெண்மை, நற்குணம், புனிதமானவன், சுத்தமானவன், கோடைக்காலம், சூரியன், சந்திரன், அக்னி, சுக்ரன் என்னும் கோள், எருக்கு, ஆகாயம், ஸ்ருங்கார ரசம்.

3373. சுண்டி2 : = சுண்டீ2 = சுக்கு.

3374. சு’ண்டா3 = யானைத் துதிக்கை, மதுபானம், கள்ளுக்கடை, வேசி, கூட்டிவைப்பவள்.

3375. சு’த்3த4 = சுத்தமான,தெளிவான, புனிதமான, குற்றமற்ற, களங்கமற்ற, வெண்மையான, ஒளியுடைய, நேர்மையான, ஒழுக்கமுள்ள, உண்மையான, சரியான, எளிமையான.

3376. சு’த்3தி4:= சுத்தத் தன்மை, நிர்மலத்வம், புனிதம், பிராயச்சித்தம், பிரகாசம், சுத்தம் செய்தல்.

3377. சு’னக: = சு’னி: = ச்’வன் = நாய்.

3378. சு’ப4 = சோ’ப4ன = மங்களகரமான, பிரகாசமான, அழகான, நல்ல, நற்குணமுடைய, அதிர்ஷ்டத்துடன் கூடிய.

3379. சு’ப4ம் = மங்களம், நல்ல அதிர்ஷ்டம், அணிகலன், தண்ணீர்.

3380. சு’ப்4ர = வெண்மையான, பிரகாசிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *