162. வ்யாபார: to வ்ராத்ய:

3221. வ்யாபார: = தொழில், வேலை, முயற்சி, காரியம், வியாபாரம், செயல்.

3222. வ்யாபாரீன் = வியாபாரி.

3223. வ்யாப்தி: = பரவுதல், நிறைவு, அடைதல், எங்கும் உள்ள தன்மை.

3224. வ்யாமிச்’ர = கலந்த, கலந்துள்ள.

3225. வ்யாமோஹ: = மயக்கம், கலக்கம், குழப்பம்.

3226. வ்யாயாம: = உடற்பயிற்சி, நீட்டுதல், முயற்சி, செயல், களைப்பு.

3227. வ்யால: = பாம்பு, புலி, சிறுத்தை, துஷ்ட யானை, கெட்ட மனிதன், அரசன், விஷ்ணு.

3228. வ்யாஸ: = பிரித்தல், பங்கு போடுதல், பரவுதல், வியாச முனிவர், அகலம், விட்டம், ஒழுங்கு படுத்துபவன், சேர்த்தி இயற்றுபவன்.

3229. வ்யாஹ்ருதி = சொல், பேச்சு, உச்சரித்தல், மந்திரங்களின் முற்சேர்க்கைச் சொற்கள்.

3230. வ்யாக்ஷேப: = தடை, தாமதம், மனக் கலக்கம்.

3231. வ்யுத்பத்தி = உற்பத்தி, ஆரம்பம், மூலம், முழு அறிவு.

3232. வ்யுத்பன்ன = உண்டான, உண்டாக்கப்பட்ட, பூர்த்தியான, முழுமை அடைந்த, நன்கு கற்றறிந்த.

3233. வ்யூதி: = நெய்தல், நெசவு, தைத்தல்.

3234. வ்யூஹ: = போர்ப்படை, அணிவகுப்பு, பகுதி, பிரிவு, கூட்டம், அமைப்பு, உடல், பகுத்தறிதல், தர்க்கம்.

3235. வ்யோமன் = ஆகாயம், விண்வெளி, அப்ரகம், தண்ணீர், சூரியனின் கோவில்.

3236. வ்யோமசாரின் = தேவன், பறவை, மஹான், நட்சத்திரம், கோள்.

3237. வ்ரஜ: = பசு மாட்டுத் தொழுவம், இருப்பிடம், இடைச்சேரி, கூட்டம், சமுதாயம், வழி, மேகம், பாதை.

3238. வ்ரண: = வ்ரணம் = காயம், புண், கட்டி.

3239. வ்ரத: = வ்ரதம் = நோன்பு, மதக்ரியை, பிரதிக்ஞை, செயல், காரியம், பயிற்சி.

3240. வ்ராத்ய: = வீழ்ச்சியுற்றவன், மட்டமான மனிதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *