1721. பிஷ்டம் = மாவு, பொடியாக்கப் பட்ட தானியம்.
1722. பிஹித = சாத்தப்பட்ட, மறைக்கப்பட்ட, கட்டப்பட்ட.
1723. பீட2கம் = பீடம் = மதபீடம், இருக்கை, ஆசனம்.
1724. பீடி2கா = முன்னுரை, முகவுரை, பின்னுரை போன்றவை.
1725. பீட3னம் = துன்பம் கொடுத்தல்,கஷ்டம் உண்டாக்குதல், எடுத்தல், பிழிதல், நெருக்குதல்.
1726. பீடா3 = பீடை, கஷ்டம், வேதனை, துன்பம், நஷ்டம், கேடு, அலட்சியம்.
1727. பீத = மஞ்சள் நிறமான, குடித்துள்ள, பரவிய, நனைந்த.
1728. பீதம் = தங்கம்.
1729. பீதலம் = பீதலகம் = பித்தளை.
1730. பீத2: = அக்னி, சூரியன், நேரம்.
1731. பீன = பருத்த, கொழுத்த, பெரிய, தடித்த.
1732. பீனஸ: = மூக்குச் சளி.
1733. பீயுஷ: = பீயூஷம் = அமிர்தம், பால்.
1734. பீலு: = பூச்சி, புழு, யானை, பூ, அம்பு, ஒரு மரம், அணு.
1735. பும்ஸ = புருஷன், ஆண், மனித இனம்.
1736. பும்ஸகோகில : = ஆண் குயில்.
1737. புங்க3: = புங்க3ம் = கூட்டம்.
1738. புட: = புடம் = தொன்னை, உறை, மூடி, மடிப்பு, புத்தகத்தின் பக்கம்.
1739. புண்ட3ரீகம் = வெண்தாமரை, வெள்ளைப் புலி.
1740. புண்ட்3ர: = செங்கரும்பு, வெண்தாமரை, நெற்றியில் இடும் திலகம் .