1941. ப்ரப4வ: = மூல காரணம், உண்டாக்குபவன், உண்டாகும் இடம், வலிமை, வல்லமை, சூரத்தனம், ஒரு ஆண்டின் பெயர்.
1942. ப்ரபா4 = ஒளி, பிரகாசம், காந்தி.
1943. ப்ரபாகர: = சூரியன், சந்திரன், நெருப்பு, அக்னிதேவன், கடல்.
1944. ப்ரபி4ன்ன = வெட்டப்பட்ட, துண்டிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, சேதமடைந்த, தூளாக்கப்பட்ட.
1945. ப்ரபு4: = எஜமானன், அதிகாரி, ஆளுபவன், பிரபு, விஷ்ணு, சிவன்.
1946. ப்ரபூ4த = உண்டான, அதிகமான, அநேகமான, பூரணமான, உயரமான, மேலான.
1947. ப்ரப்4ருதி: = ஆரம்பம்.
1948. ப்ரமத்த = ப்ரமத3 = குடிபோதையில் உள்ள, பைத்தியம் பிடித்த, அலக்ஷியமான.
1949. ப்ரமத2னம் = கடைதல், அடித்தல், காயப்படுத்துதல், கொலை செய்தல்.
1950. ப்ரமாணம் = அளவு, பரிமாணம், உருவம், எல்லை, சாக்ஷி, அனுமானம், காரணம்.
1951. ப்ரமாத3: = அசட்டை, கவனக் குறைவு, போதை, வெறி, அபாயம், துன்பம், பயம்.
1952. ப்ரமுக2 = முக்கியமான, முதலான, மேன்மையான.
1953. ப்ரமுக: = மரியாதைக்கு உரியவர்.
1954. ப்ரமோத3: = சந்தோஷம், மகிழ்ச்சி, ஒரு ஆண்டின் பெயர்.
1955. ப்ரயத்ன: = ப்ரயாஸ: = முயற்சி, உழைப்பு .
1956. ப்ரயாக3: = யாகம், குதிரை, இந்திரன், திரிவேணி சங்கமம்.
1957. ப்ரயாணம் = பயணம், யாத்திரை, புறப்படுதல்.
1958. ப்ரயுக்த = பூட்டப்பட்ட, இணைக்கப்பட்ட, சேர்ந்த, செயல்பட்ட.
1959. ப்ரயோக3: = பிரயோகித்தல், உபயோகிதல், வழக்கம், அப்யாசம், செயல், சாதனம், கர்மம், ஆரம்பம்.
1960. ப்ரயோஜனம் = உபயோகம், எண்ணம், குறிக்கோள், லாபம்.