97. ப்ரதீ3ப: to ப்ரபோ3த4:

1921. ப்ரதீ3ப: = விளக்கு, விரிவுரை, பிரகாசப்படுத்து.

1922. ப்ரதே3ச’: = இடம், நாடு, மாகாணம், சுவர், உதாரணம்.

1923. ப்ரதோ3ஷ: = குற்றம், பாவம், அந்திப் பொழுது, சூரியன் அஸ்தமனத்துக்கு முன்னும் பின்னும் ஆன காலம்.

1924. ப்ரத்3யும்ன: = கிருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன், மன்மதன்.

1925. ப்ரத4னம் = போர், அழிவு, பிளத்தல், போரில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருள்.

1926. ப்ரதா4ன = முக்கியமான.

1927. ப்ரதா4னபுருஷ: = முக்கியமானவன்.

1928. ப்ரபஞ்ச: = உலகம், விஸ்தாரத்தன்மை, விவரித்தல், குவியல், கூட்டம், தோற்றம், மாயை, தெளிவு, வஞ்சனை.

1929. ப்ரபன்ன = ஓரிடத்தை அடைந்த, வாக்கு அளிக்கப்பட்ட, அடையப் பட்ட, சரணடைந்த, பெற்ற, உடைய, எளிமையான, துன்பதில் உள்ள.

1930. ப்ரபாட2க: = பாடம், விரிவுரை, புத்தகத்தின் ஒரு பகுதி.

1931. ப்ரபாத: = செல்லுதல், வீழ்ச்சி, நீர் வீழ்ச்சி, செங்குத்தான மலை அல்லது பாறை.

1932. ப்ரபிதாமஹ: = முப்பாட்டன், பாட்டனின் தந்தை, பிரமன்.

1933. ப்ரபிதாமஹீ = பாட்டனின் தாய்.

1934. ப்ரபௌத்ர: = பேரனின் மகன்.

1935. ப்ரபௌத்ரீ = பேரனின் மகள்.

1936. ப்ரகுல்ல = மலர்ந்த, விரிந்த,முழுமையான, சந்தோஷமான.

1937. ப்ரபந்த4: = கட்டுரை, கற்பனை, இலக்கியப் படைப்பு, ஒழுங்கு.

1938. ப்ரப3ல = வலியுள்ள, சூரத்தனமான, தீவிரமான, முக்கிய.

1939. ப்ரபுத்3த4 = விழித்த, விழித்தெழுந்த, புத்தி கூர்மையுள்ள, அறிவு படைத்த, மலர்ந்த, பரந்த.

1940. ப்ரபோ3த4: = விழிப்பு, விழித்தல், விழித்திருத்தல், கண்காணித்தல், புரிந்து கொள்ளுதல், விளங்கச் செய்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *