1901. ப்ரத்யர்பித = திருப்பிக் கொடுக்கப்பட்ட.
1902. ப்ரத்யக்ஷ = எதிரேயுள்ள, பார்க்கக்கூடிய, விளக்கமான, கண் எதிரே உள்ள.
1903. ப்ரத்யாதே3ச’: = கட்டளை, மறுப்பு, அறிவிப்பு, பிரகடனம், எச்சரிக்கை.
1904. ப்ரத்யாசா’ = அதிக ஆசை, பேராசை, விருப்பம், நம்பிக்கை.
1905. ப்ரத்யாஹார: = திரும்பி வருதல், பின் வாங்குதல், புலன்களை அடக்குதல், பிரளயம், உலகின் அழிவு.
1906. ப்ரத்யுத்தரம் = பதில், பதில் அளித்தல்.
1907. ப்ரத்யுத்பன்ன = மறுபடியும் உண்டாக்கபட்ட, தயாராக உள்ள.
1908 . ப்ரத்யுத்3யம: = எதிர் முயற்சி, நிறுத்துதல், சமானம்மான எடை.
1909. ப்ரத்யுபகார: = பதில் உபகாரம்.
1910. ப்ரத்யுபஸ்தித = அருகில் வந்துள்ள, இருக்கின்ற.
1911. ப்ரத்யுஷஸ் = ப்ரத்யூஷஸ் = ப்ரத்யூஷம் = காலை, விடியற்காலை.
1912. ப்ரத்யூஷ: = சூரியன்.
1913. ப்ரத்யூஹ: = இடையூறு, தடை.
1914. ப்ரதம = முதல், முதலான, முக்கியமான, முன் காலத்திய.
1915. ப்ரதா2 = புகழ், பிரசித்தி.
1916. ப்ரது2: = விஷ்ணு.
1917. ப்ரது2க: = அவல்.
1918. ப்ரத3ர்சனம் = தோற்றம், காண்பித்தால், கற்பித்தல்.
1919. ப்ரதா3த்ரு = கொடுப்பவன், தாராளமானவன், இந்திரன்.
1920. ப்ரதா3னம் = தானம் செய்தல், கொடுத்தல், திருமணம் செய்து கொடுத்தல்.