95. ப்ரதிபா4ஸ: to ப்ரத்யவாய:

1881. ப்ரதிபா4ஸ: = மனதில் திடீரென்று பிரகாசிப்பது / தோன்றுவது, தோற்றம், மாயை, பிரமை.

1882. ப்ரதிமா = பொம்மை, ஒரே போன்றது, ஒரே வித உருவம் உள்ளது.

1883. ப்ரதிலிபி: = சரியான நகல்.

1884. ப்ரதிவாத3: = பதில், விடை.

1885. ப்ரதிஷ்டா = திடத்தன்மை, நிலை, வீடு, பதவி, இடம், புகழ், கீர்த்தி, பூமி, பிரதிஷ்டை செய்தல்.

1886. ப்ரதிஷ்டி2த = ஸ்தாபிக்கப்பட்ட, கெட்டிப்படுத்தப்பட்ட, கட்டப்பட்ட, புகழுடன் கூடிய.

1887. ப்ரதிஸரம் = தாயத்து, ரக்ஷை, மஞ்சள் கயிறு, கங்கணம்.

1888. ப்ரதிஹதி: = பதிலடி, சோர்வு அடைதல், சினம்.

1889. ப்ரதிக்ஷணம் = ஒவ்வொரு நொடியும்.

1890. ப்ரதிக்ஷிப்த = தள்ளப்பட்ட, எதிர்க்கப்பட்ட, நிந்திக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட.

1891. ப்ரதிகம் = விக்ரஹம், வாய், முகம், வாக்கியத்தின் முதல் சொல்.

1892. ப்ரதீசீ = மேற்கு திசை.

1893. ப்ரதீசீன் = மேற்கத்திய, மேற்கிலிருந்து, பின்தொடரும்,

1894. ப்ரதீத = புறப்பட்ட, புகழ் பெற்ற, கற்று அறிந்த, திருப்தி அடைந்த.

1895. ப்ரதீதி: = நம்பிக்கை, அறிவு, நிச்சயித்தல், சந்தோஷம், அருகே செல்லல்.

1896. ப்ரதீக்ஷணம் = ப்ரதீக்ஷா = எதிர்பார்த்தல், ஆசை, விருப்பம், பார்த்தல்.

1897. ப்ரத்யேகம் = ஒவ்வொன்றிலும் தனித்தனியாக.

1898. ப்ரத்யபி4ஞானம் = நினைவு படுத்திக் கொள்ளல், நினைவு படுத்தும் பொருள்.

1899. ப்ரத்யய: = நம்பிக்கை, சிரத்தை, காரணம், ஆதாரம், புகழ், அனுபவம், தொளை, அப்யாசம்.

1900. ப்ரத்யவாய: = குறைவு, ஆபத்து, தடை, மாறுபட்ட வழி, பாவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *