1861. ப்ரதாப: = உஷ்ணம் , சூடு, பிரகாசம், ஒளி, காந்தி, மேன்மை, வலிமை, சக்தி, வீரம், ஆண்மை,
1862. ப்ரதிகார: = ப்ரதீகார: = கைம்மாறு, பரிஹாரம், பழி வாங்குதல், பதிலுக்குக் கொடுத்தல்.
1863. ப்ரதிகாச’: = ப்ரதீகச’: = ப்ரதிச்ச2ந்த3: = பிரதி பிம்பம், நிழல், தோற்றம், சமானமானத் தன்மை.
1864. ப்ரதிகூல = விரோதமான, எதிரிடையான, எதிர்மறையான.
1865. ப்ரதிக்ரியா = பழிக்குப்பழி, பதில் செய்கை, மாற்றுச் செயல், கைம்மாறு, பரிஹர்ரம், அலங்காரம் செய்து கொள்ளுதல்.
1866. ப்ரதிக3த = முன்னும் பின்னும் பறக்கும், சுற்றித்திரியும்.
1867. ப்ரதிக்3ருஹித = எடுத்துக்கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட, திருமணம் செய்து கொள்ளப்பட்ட.
1868. ப்ரதிக்ஞா = சபதம் செய்தல், விரதம் பூணுதல், வாக்குக் கொடுத்தல், சத்தியம் செய்தல், அங்கீகரித்தல், தீர்மானித்தல், அறிவித்தல்.
1869. ப்ரதிதி3னம் = ஒவ்வொரு நாளும்.
1870. ப்ரதித்4வனி = ப்ரதித்4வான: = எதிரொலி.
1871. ப்ரதிநிதி4: = பிரதிநிதி, உதவி செய்பவன், ஜாமீன் கொடுப்பவன், படம், பிம்பம்.
1872. ப்ரதிபத்தி : = அறிவு, பெறுதல், கவனித்தால், நிறைவேற்றுதல், ஆரம்பம், அனுஷ்டானம், சங்கல்பம், உபாயம், கீர்த்தி, புகழ், துணிவு, நம்பிக்கை, புத்திவலிமை.
1873. ப்ரதிபத3ம் = ஒவ்வொரு காலடி சுவட்டிலும் / சொல்லிலும் / இடத்திலும்.
1874. ப்ரதிபன்ன = அடைந்த, நிரூபிக்கப்பட்ட, செய்யப்பட்ட, ஒப்புக்கொள்ளப்பட்ட, ஒரேவித எண்ணங்கொண்ட.
1875. ப்ரதிபக்ஷ = எதிர்பக்கம், பிரதிவாதி,விரோதி, எதிரி.
1876. ப்ரதிப3ந்த4: = தடி, கட்டுதல், எதிர்ப்பு, முற்றுகை, தொடர்பு.
I877. ப்ரதிபி3ம்ப3ம் = பிரதிமை, படம், பிம்பம், நிழல்.
1878. ப்ரதிபோ3த4னம் = விழித்தல், எழுப்புதல், புகட்டுதல், தெரிவித்தல், உபதேசித்தல்.
1879. ப்ரதிபா4 = தோற்றம், தரிசனம், பிம்பம், காந்தி, ஒளி, புத்தி, மேதை, கற்பனை, அறிவு.
1880. ப்ரதிபா4ஷா = பதில் சொல்லுதல்.