93. ப்ரக்3ரஹ: to ப்ரதான:

1841. ப்ரக்3ரஹ: = ப்ரக்3ராஹ = பிடித்தல், எடுத்தல், தூக்குதல், எடுத்துச் செல்லல், தாங்கிச் செல்லல், தலைக்கயிறு, கடிவாளம், தராசின் கயிறு.

1842. ப்ரசண்ட3 = தீவிரமான, கடுமையான, உஷ்ணமான, கோபம் அடைந்த, தைரியம் உள்ள, பயங்கரமான.

1843. ப்ரசார: = பிரசாரம், விளம்பரம் செய்தல், சுற்றுதல், அலைந்து திரிதல், செயல் முறை, உபயோகம், வழக்கம், சாலை, வழி,
மாடு மேயும் இடம்.

1844. ப்ரசுர = அதிகமான, ஏராளமான, பெரிய, விசாலமான, விஸ்தாரமான, பூரணமான, நிரம்பிய.

1845. ப்ரசேதஸ் = வருணன்.

1846. ப்ரசோதி3த = தூண்டப்பட்ட, கட்டளை இடப்பட்ட, குறிக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட.

1847. ப்ரச்ச2த3: = மூடும் துணி / பொருள், போர்வை, படுக்கை விரிப்பு.

1848. ப்ரச்ச2ன்ன = மூடப்பட்ட, ஒளித்து வைக்கப்பட்ட, ரகசியமான, ஆடை அணிந்த.

1849. ப்ரஜா = வழித்தோன்றல், குழந்தை, பிறப்பு, உற்பத்தி, ஆண்மை, வீரியம், மக்கள், பிராணி, மனித இனம்.

1850. ப்ரஜாபதி = பிரமன்.

1851. ப்ரக்ஞா =அறிவு, புத்தியின் சக்தி, பகுத்தறிவு, சரஸ்வதியின் ஒரு பெயர்.

1852. ப்ரணதி: = நமஸ்கரித்தல், வணங்குதல், அடக்கமாக இருத்தல்.

1853. ப்ரணவ: = ஓம் என்னும் பிரணவம்.

1854. ப்ரணாம: = வணங்குதல், நமஸ்கரித்தல், வளைதல்.

1855. ப்ரணால: = ப்ரணாலீ = வாய்க்கால், தொடர்ச்சி.

1856. ப்ரணிபதனம் = ப்ரணிபாத: = சாஷ்டாங்க நமஸ்காரம்.

1857. ப்ரணிஹித= வைக்கப்பட்ட, பரப்பப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட,
நிலை நாட்டப்பட்ட.

1858. ப்ரணேத்ரு = தலைவன்.

1859. ப்ரததி: = பரவுதல், விரிவு, கொடி.

1860. ப்ரதான: = முளை, பூமியில் படரும் கொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *