1801. ப்ருச்சா2 = கேட்டல், கேள்வி.
1802. ப்ருத2க் = வேறாக, தனித் தனியாக, தனிப்பட்ட, தவிர, தனியாக.
1803. ப்ருத்2வீ = பூமி, பூதத்வம்.
1804. ப்ருது2 = ப்ருது2ல = அகன்ற, விஸ்தாரமான, பெரிய, அதிகமான.
1805. ப்ருது2கம் = அவல்.
1806. ப்ருஷ்ட = கேட்கப்பட்ட.
1807. ப்ருஷ்டத: = பின் புறமாக, பின்னாலிருந்து.
1808. ப்ருஷ்டம் = முதுகு, பின்புறம், மேற்பரப்பு, புத்தகத்தின் பக்கம்
1809. பேசக: = ஆந்தை, கோட்டான், பேன், படுக்கை, மேகம், யானையின் வால்.
1810. பேட: = பேடக: = பெட்டி, பை, கூடை, கூட்டம்.
1811. பேடிகா = பேடி = பெட்டி, சிறுபை, கூடை.
1812. பேலி: = பேலின் = குதிரை.
1813. பேச’ = பேச’ல = பேஸல = மிருதுவான, அழகான, நல்ல, சாமர்த்தியமுள்ள, கபடமுள்ள.
1814. பைதாமஹ = பிரமன் / தகப்பன் வழிப் பாட்டனுடன் தொடர்புடைய.
1815. பைத்ருக = தகப்பன் வழிப் பரம்பரையாக வந்த.
1816. பைத்ருகம் = இறந்து போன தகப்பன் முதலிய முன்னோருக்குச் செய்யப்படும் சடங்கு.
1817. பைசா’ச: = பிசாசு, பேய், ஒரு வித மட்டமான ஹிந்து திருமணம்.
1818. பைசு’னம் = பைசு’ன்யம் = வஞ்சனை, கோள் சொல்லுதல்.
1819. போத: = கன்று, 10 வயதான யானை, துணி, படகு, கப்பல்.
1820. போஷணம் = போஷித்தல், வளர்த்தல்.