1781. பூர்ணகாம: = விருப்பம் பூர்த்தியடைந்த.
1782. பூர்ணகும்ப3: = தண்ணீர் நிறைந்த சொம்பு.
1783. பூர்தம் = பூர்த்தி: = முழுமை, நிறைவு, திருப்தி, மகிழ்ச்சி, முடிவு.
1784. பூர்வ = எதிரிலுள்ள, கிழக்கத்திய, முந்தைய, முன்காலத்திய, முன் நடந்த, முன்னே சொல்லப்பட்ட.
1785. பூர்வக்ருத = முன்னர் செய்யப்பட்ட.
1786. பூர்வஜ: = அண்ணன், முன்னோன்.
1887. பூர்வஜா = தமக்கை.
1788. பூர்வஞானம் = முன் பிறவியைப் பற்றிய அறிவு.
1789. பூர்வத: = முதலில், முன்னால், ஆரம்பத்தில் .
1790. பூர்வத்ர = முன்னால், முன் பகுதியில்.
1791. பூர்வபுருஷ: = பிரமன், தந்தை, தாத்தா, முப்பாட்டன்.
1792. பூர்வப2ல்கு3னி = பூர நக்ஷத்திரம்.
1793. பூர்வபா4த்3ரபதா3 = பூர்வ ப்ரோஷ்ட2பதா3 = பூரட்டாதி நக்ஷத்திரம்.
1794. பூர்வவத் = முன்போலவே.
1795. பூர்வபர = முதலும் கடைசியும், முன்னதும் பின்னதும், கிழக்கத்தியதும் மேற்கத்தியதும்.
1796. பூர்வாபி4முக2 = கிழக்குமுகமாக.
1797. பூர்வார்ஜிதம் = முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து.
1798. பூர்வாஷாடா4 =பூராட நக்ஷத்ரம்.
1799. பூர்வேத்3யு: = நேற்று, கடந்த நாள்.
1800. பூஷன் = சூரியன்.