9. உத3ய: to உபநயனம்

161. உத3ய: = உதித்தல், எழுதல், உண்டாக்குதல், உற்பத்தி செய்தல், ஸ்ருஷ்டி, அபிவிருத்தி, வளர்ச்சி, செழிப்பு, விளைவு, பயன், நிறைவு, லாபம்.

162. உதா3ன: = மேல் மூச்சு விடுதல், பஞ்சப் பிராணன்களில் கழுத்தில் இருந்து மேல் எழும்பும் காற்று, தொப்புள், ஒருவகைப் பாம்பு.

163. உதா3ர = தாராள மனம் உள்ள, சிறந்த, மேலான, புகழ் பெற்ற, அழகான, நாவன்மை பெற்ற.

164. உதா3ஹரணம் = எடுத்துக் காட்டு, உவமை, வர்ணனை, விளக்கிக் காட்டுதல்.

165. உத்3தி3ஷ்ய = உத்தேசித்து, மனதில் எண்ணி, ஒன்றைக் குறித்து.

166. உத்3தா4ர: = இழுத்து வெளியே தள்ளுவது, விடுபடல், தூக்குதல், கடன், மோக்ஷம்.

167. உத்3தா4ரணம் = காப்பாற்றுதல், மீட்டல், விடுபடல், எழுப்புதல்.

168. உத்3ப4வ: = உற்பத்தி, படைப்பு, பிறப்பு, உண்டாகும் இடம், விஷ்ணு.

169. உத்3யானம் = தோட்டம், உலாவுதல், கருத்து, உத்தேசம்.

170. உத்3யோக: = முயற்சி, தொழில், செயல், காரியம், பதவி.

171. உத்3வேக: = நடுக்கம், சஞ்சலம், திகில், கவலை, துக்கம், வியப்பு, ஆச்சர்யம்.

172. உன்னத = எழும்பிய, உயர்த்தப்பட்ட, உயரமான, முக்கியமான, உயர்ந்த.

173. உன்மத்த = மது அருந்திய, பைத்தியம் பிடித்த, அநாகரீகமான, சிதறுண்ட.

174. உன்மேஷம் = கண்களைத் திறப்பது, இமைகளைக் கொட்டுவது, மலருவது, திறப்பது, விழித்தல், எழுதல், தெளிவடைதல்.

175. உபகரணம் = சாமான், பொருள், சாதனம், தொழில் கருவிகள், தொண்டு புரிதல், உதவி புரிதல்.

176. உபகாரி = அரண்மனை, அரசனின் கூடாரம், சத்திரம், சாவடி.

177. உபக்3ரஹ: = சிறை வைத்தல், கைதி, பிடித்தல், தோல்வி, கிருபை, உற்சாகமூட்டுதல், சிறு கிரகம்.

178. உபசார: = சேவை, தொண்டு, பணிவிடை, கௌரவித்தல், பூஜித்தல், விருந்தோம்பல்,அழைத்தல், வணங்குதல், சடங்கு, வழிமுறை, நடைமுறை.

179. உபதே3ச: = போதித்தல், ஆலோசனை கூறுதல், தீக்ஷை, மந்த்ரோபதேசம்.

180. உபநயனம் = அருகில் கொண்டு செல்லல், வெகுமதி, காணிக்கை, பூணல் போடும் சடங்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *