89. புரோத4ஸ் to பூர்ண

1761. புரோத4ஸ் = புரோஹித: = புரோஹிதர்.

1762. புலக: = மயிர்க்கூச்சு, புழு, கல், வைரம், மாணிக்கக் கல்லில் தோஷம்.

1763. புளிந்த3: = காட்டுமனிதன், மலை சாதியினன், வேடன்.

1764. புஷ்கரம் = கரு நெய்தல் பூ, தாமரைப்பூ, பேரிகை, வாள் உரை, தண்ணீர், அம்பு, ஆகாயம்.

1765. புஷ்கர: = ஏரி, குளம், பேரிகை, மத்தளம், சூரியன், சிவன்.

1766. புஷ்கரிணீ = குளம், தாமரைக் குளம், பெண் யானை, தாமரைச் செடி.

1767. புஷ்கள = அதிகமான, மிகுதியான, மேலான, பூரணமான, அருகில் உள்ள.

1768. புஷ்டி: = வளர்ப்பு, போஷனை, முழுமை, மோக்ஷம், நலம், செல்வம்.

1769. புஷ்பம் = மலர், புஷ்பராகக்கல். பெண்களின் மாத விடாய்.

1770. புஷ்பகம் = குபேரனின் விமானம், பூ, கங்கணம்.

1771. புஷ்பித = மலர்ந்த, பூக்கள் நிறைந்த, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட.

1772. பூக3: = குவியல், கூட்டம், சங்கம், பாக்குமரம்.

1773. பூஜனம் = பூஜை, பூஜித்தால், கௌரவித்தல்.

1774. பூஜார்ஹம் = பூஜ்ய = பூஜிக்கத் தக்க.

1775. பூஜித = பூஜிக்கப்பட்ட, புகழப்பட்ட.

1776. பூத = புனிதமான, சுத்தம் செய்யப்பட.

1777. பூயம் = பூய: = சீழ்.

1778. பூர: = நிரப்புதல், பூர்த்தி செய்தல், திருப்தி செய்தல்.

1779. பூரண: = பாலம், அணை, கடல்.

1780. பூர்ண = முழுமையான, பூர்த்தியான, வலிமையுள்ள.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *