1741. புண்ய = புனிதமான, சுத்தமான, நல்ல, குணமுள்ள, இன்பமான.
1742. புண்யச்’லோக: = புண்ணிய நடத்தையுள்ள. உதாரணங்கள்:- நளன், யுதிஷ்டிரன், ஜனார்த்தனன் முதலியோர்.
1743. புனர் = மறுபடியும், மேலும்.
1744. புனராக3மனம் = புனராவர்த்த: = திரும்பி வருதல்.
1745. புனராவ்ருத்தி = உருப்போடுதல், திரும்பி வருதல், மறுபிறவி எடுத்தல்.
1746. புனருக்தி: = திரும்பத் திரும்பச் சொல்லுதல், பயனற்ற தன்மை.
1747. புனருத்தா2னம் = மறுபடி உயிர் பெறுதல்.
1748. புனருத்3தா4ரணம் = புத்துயிர் ஊட்டல்.
1749. புரதம் = முன்னே, எதிரே.
1750. புரந்த3ர: = இந்திரன், சிவன், விஷ்ணு, அக்னிதேவன், திருடன்.
1751. புரம் = பட்டணம் , கோட்டை, வீடு, இருப்பிடம், உடல், அந்தப்புரம், குங்குலியம்.
1752. புரந்த்4ரீ = திருமணமான குடும்பப்பெண்.
1753. புரஸ்கார: = புரஸ்கரணம் = சன்மானம் / மரியாதை செய்தல், பூஜை, பூர்த்தி செய்தல், தயாரித்தல்.
1754. புரா = முன்காலத்தில், எல்லாவற்றுக்கும் முதலில், சீக்கிரத்தில்.
1755. புரி: = நகரம், பட்டணம், ஆறு, அரசன்.
1756. புரீஷம் = அழுக்கு, மலம், சாணம்.
1757. புருஷகார: = முயற்சி, மனிதச் செயல்.
1758. புருஷத்வம் = ஆண்மை, வீரியம், மனித இயல்பு.
1759. புருஷார்த்த2: = மனித வாழ்வின் குறிக்கோள் (அறம், பொருள், இன்பம் , வீடு முதலியன)
1760. புருஷோத்தம: = விஷ்ணு, பரம்பொருள், மேன்மையான மனிதன்.