86. பிக: to பிசு’ன

1701. பிக: = குயில்.

1702. பிங்க3: = மஞ்சள், மங்கலான சிவப்பு அல்லது பழுப்பு நிறம், எருமை. எலி.

1703. பிங்க3ள: = மஞ்சள் / பழுப்பு வர்ணம், நெருப்பு, கீரி, குரங்கு, ஒருவகைப் பாம்பு, ஒரு முனிவரின் பெயர், ஒரு ஆண்டின் பெயர்.

1794. பிச்ச2ம் = மயில் தோகை, பறவையின் கொண்டை, இறகு.

1705. பிண்ட3ம் = உருண்டை, கவளம், உணவு, குவியல், சேர்க்கை, கூட்டம், உடல்.

1706. பிண்யாகம் = பிண்யாக: = பிண்ணாக்கு, தூபம் வாசனைப் பொருள், குங்குமப்பூ, பெருங்காயம்.

1707. பிதர: = முன்னோர்கள்.

1708. பிதரௌ = தந்தையும், தாயும்.

1709. பிதாமஹ: = தந்தையைப் பெற்ற பாட்டன்.

1710. பித்ருவத் = தந்தையைப் போல.

1711. பினாக: = பினாகம் = சிவனுடைய வில்.

1712. பினாகபாணி = பினாகின் = சிவபிரான்.

1713. பிபாஸா = தாகம்.

1714. பிபீல: = பிபீலிக: = ஆண் எறும்பு.

1715. பிபீலீ = பிபீலிகா = பெண் எறும்பு.

1716. பிப்பல: = அரசமரம், முலைக் காம்பு.

1717. பிப்பலம் = தண்ணீர், அத்திப் பழம், அரசம் பழம்.

1718. பிப்பலீ = திப்பிலி

1719. பிசா’ச: = பிசாசு, பேய்.

1720. பிசு’ன = நிந்திக்கும், கோள் சொல்லும், மட்டமான, கெட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *