82. பர்வணி to பக்ஷின்

1621. பர்வணி = பௌர்ணமி, அமாவாசை, திருநாள், உற்சவம்.

1622. பர்வத: = மலை, பாறை, எண் ஏழு.

1623. பர்வன் = கணு, முடிச்சு, அவயவம், பகுதி, பாகம், படி, படிக்கட்டு, அமாவாசை, பௌர்ணமி, சூரிய கிரஹணம், சந்திர கிரஹணம், உற்சவம், திருநாள்.

1624. பல: = பலால: = வைக்கோல், பதர், உமி.

1625. பலாயணம் = ஓடிவிடுதல், பறத்தல்.

1626. பலாச’: = புரச மரம்.

1627. பலித = தலை நரைத்த, கிழ, வெளுத்த.

1628. பல்லவ: = பல்லவம் = தளிர், மொட்டு, திறமை, முளை.

1629. பல்லீ = சிறு கிராமம், வீடு, குடிசை, பட்டினம்.

1630. பல்வலம் = சிறு குட்டை

1631. பவன: = காற்று.

1632. பவனம் = புனிதமாகுதல், சுத்தம் செய்தல், புடைத்தல், சல்லடை.

1633. பவமான: = காற்று, ஒரு யாகத்திற்கான நெருப்பின் பெயர்.

1634. பவித்ர = புனிதமான, சுத்தமான.

1635. பசு’: = விலங்கு, பசு, பலியிடப்படும் மிருகம்.

1636. பச்’சாத் = பின்னால், பிறகு, மேற்கில் இருந்து.

1637. பச்’சிம = மேற்கு.

1638. பக்ஷ: = இறகு, சிறகு, பக்கம், கட்சி, வகுப்பு, பதில், கூட்டம், சுவர், நிலைமை.

1639. பக்ஷபாத: = அன்பு, பிரியம், ஓர வஞ்சனை, ஒரு பக்கத்தைச் சார்ந்த.

1640. பக்ஷின் = பறவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *