1601. பரிஷ்கர: = பரிஷ்கார: = அலங்கரித்தல், சுத்தப்படுத்துதல்.
1602. பரிஷ்க்ருத = அலங்கரிக்கப்பட்ட, சுத்தம் செய்யப்பட்ட, சமைக்கப்பட்ட.
1603. பரிஸமாபனம் = பரிஸமாப்தி: = பர்யவஸானம் = பூர்த்தி செய்தல், முடிவு.
1604. பரிஸர: = அருகாமை, இடம், அகலம், சாவு.
1605. பரிஹரணம் = விலக்குதல், தள்ளிவிடுதல், அப்பால் கடத்தல், நிராகரித்தல், கொண்டு போதல், பித்ரு தர்ப்பணம் செய்தல்.
1606. பரிஹார: = தியாகம், நிவாரணம், பரிகாரம், மாற்று, காத்தல்.
1607. பரிஹாஸ: = ஏளனம் செய்தல், பரிகாசம் செய்தல்.
1608. பரீக்ஷ: = பரீட்சை செய்பவன், சோதனை செய்பவன்.
1609. பரீக்ஷா = பரீட்சை, தேர்வு.
1610. பரு: = கணு, முடிச்சு, அவயவம், சுவர்க்கம், மலை, கடல்.
1611. பருஷ = கடினமான, கசப்பான, கூர்மையான, தீவிரமான, கொடுமையான.
1612. பரேத்3யு: = மறுநாள், மற்றொரு நாள்.
1613. பரோக்ஷ: = கண்ணுக்குப் புலப்படாத, இல்லாத, அறியப்படாத.
1614. பர்ஜன்ய: = மேகம், இந்திரன்.
1615. பர்ணம் = இலை, இறகு, அம்பின் இறகு.
1616. பர்யங்க: = கட்டில், மஞ்சம், படுக்கை.
1617. பர்யடனம் = அலைந்து திரிதல், யாத்திரை செல்லுதல், சுற்றுதல்.
1618. பர்யந்த: = வரம்பு, எல்லை, முடிவு, ஓரம், விளிம்பு.
1619. பர்யாகுல = அழுக்குப் படிந்த, கலங்கிய, கலக்கம் அடைந்த.
1620. பர்யாப்தி = பெற்ற, அடைந்த, நிறைந்த, நிரம்பிய.