141. உக்த2ம் = பழமொழி, வாக்கியம், செய்யுள், துதிப்பாட்டு.
142. உக்3ர: = பயங்கரமான, கொடூரமான, நாகரீகமற்ற, பலமுள்ள, வலிமையான, கடுமையான, கடினமான, தீவிரமான, உஷ்ணமான.
143. உசித: = தகுதி உள்ள, சரியான, உபயோகமான, பழக்கத்தில் உள்ள, பழக்கப்பட்ட.
144. உச்சாரணம் = சொல்லுதல், உச்சரித்தல், எடுத்தல், அறிவிப்பு.
145. உச்சி2ஷ்டம் = யாக உணவில் மீதமானது, எச்சில்.
146. உச்ச்2வாஸ: = மூச்சை வெளிவிடுதல், பெரு மூச்சு, தேற்றுதல், சமாதானப் படுத்துதல், உற்சாகப் படுத்துதல்.
147. உஜ்ஜ்ரும்ப4ணம் = கொட்டாவி விடுதல், வாய் திறந்திருத்தல், பரப்புதல், வளர்ச்சி.
148. உஜ்ஜ்வலனம் = எரிதல், பிரகாசித்தல், நெருப்பு.
149. உடு3: = நக்ஷத்திரம், தண்ணீர்.
150. உடு3பதி: = சந்திரன்.
151. உத்கர்ஷணம் = உயரே இழுத்தல், எடுத்துக் கொள்ளல்.
152. உத்தம = மிக நல்ல, மேன்மை பொருந்திய, முக்கிய, மேலான, உயரமான, பெரிய, முதன்மையான.
153. உத்தர = வடக்கு திசையில் உள்ள, மேலேயுள்ள, உயரத்தில் உள்ள, முக்கியமான, அதிகமான, உயர்ந்த.
154. உத்தராயணம் = சூரியன் வடக்கு நோக்கி செல்லும் காலம் ( தை மாதப் பிறப்பு முதல் ஆடி மாத பிறப்பு வரை).
155. உத்தான = பரப்பப்பட்ட, விஸ்தரிக்கப்பட்ட, நீட்டிய, நேரான, கபடமற்ற, திறந்த, உண்மையான.
156. உத்தானம் = எழுதல், உதயம் ஆவது, மூலம், ஆரம்பம், உற்பத்தி, புனர் நிர்மாணம், முயற்சி, செயல், சந்தோஷம்.
157. உத்பதனம் = மேலே பறத்தல், மேலே குதித்தல், எழும்புதல், பிறத்தல், உற்பத்தி செய்தல்.
158. உத்பத்தி: = பிறப்பு, மூலம், உற்பத்தி, எழுதல், லாபம், விளைச்சல், வரும்படி.
159. உத்ஸவ: = புண்ய காலம், பண்டிகை, கொண்டாட்டம், ஆனந்தம், மகிழ்ச்சி, ஆசை, விருப்பம்.
160. உத்ஸாஹ: = விடாமுயற்சி, சக்தி, தைரியம், திறமை, வலிமை, ஸந்தோஷம்.