1561. பரிணாம: = பரீணாம: = மாறுதல், மாறுபாடு, ஜீரணித்தல், பயன், பக்குவத்தன்மை, கனிவு, முதிர்ச்சி, முழுமை, முடிவு, மூப்பு, ஒரு வகைச் சொல்லணி.
1562. பரிணாஹ: = பரீணாஹ: = பரிதி, சுற்றளவு, அகலம்.
1563. பரிணேத்ரு: = கணவன்.
1564. பரிதாப: = துன்பம், துக்கம், சோகம், அதிக உஷ்ணம் .
1565. பரிதுஷ்டி: = மிக அதிகமான மகிழ்ச்சி / திருப்தி / சந்தோஷம்.
1566. பரித: = சுற்றிலும், எல்லாப் பக்கங்களிலும்.
1567. பரித்யாக3: = விட்டு விடுதல், விலக்குதல்.
1568. பரித்ராணம் = காப்பாற்றுதல், விடுவித்தல்.
1569. பரிதி4: = சுவர், வேலி, சூரியனைச் சுற்றி உள்ள வட்டம், சுற்றளவு, சக்கரத்தின் பரிதி, யாக குண்டத்தின் முப்புறத்திலும் வைக்கப்படும் சமித்துக்கள்.
1570. பரிநிர்வாணம் = முழு அழிவு, பிறப்பில்லாத கடைசிச் சாவு.
1571. பரிநிர்வ்ருத்தி: = மோக்ஷம், வீடுபேறு.
1572. பரிபக்வ = முற்றிலும் பழுத்த, நன்கு கனிந்த, நன்கு சமைக்கப்பட்ட.
1573. பரிபாடி: = பரிபாடீ = விதம், முறை, ஒழுங்கு.
1574. பரிபாட2: = முழு வரலாறு, வேதம் முழுவதும் ஓதுதல்.
1575. பரிபாலனம் = காத்தல், நடத்தல், வளர்த்தல், போஷித்தல்.
1576. பரிபூஜனம் = சன்மானம் செய்தல், பூஜித்தல், மரியாதை செய்தல்.
1577. பரிபூர்ண = முழுவதும் நிரம்பிய, முற்றிலும் பூர்த்தி அடைந்த,
1578. பரிபோஷணம் = போஷித்தல், வளர்த்தல், நடத்துதல்.
1579. பரிப்ளுத = நனைந்த, மூழ்கிய, வெள்ளத்தால் சூழப்பட.
1580. பரிபா4ஷா = பரிபாஷை, விரிவுரைக் குறிப்பு. சொற்பொழிவு, நிந்தனை, வசை, புத்தகத்தில் உள்ள சொற்களின் அட்டவணை.