1521. பரமேச்’வர: = பரம்பொருள், இறைவன், கடவுள், விஷ்ணு, சிவன்.
1522. பரம் = மிகவும் மேலான நிலை, முக்தி, பரம் பொருள்.
1523. பரம்பர = பரம்பரீண = பாரம்பர்ய = மேன்மேலும், வழிவழி வந்த, தொடர்ந்து வரும்.
1524. பரலோக: = வேறு உலகம், மேல் உலகம்.
1525. பரவச’ = பிறரை அண்டி இருக்கும், பிறர் மீது ஆதாரப்படும்.
1526. பரசு’: = கோடரி.
1527. பரஸ்தாத் = அப்பால், பின்னர், பின்னால், ஒன்றுக்குப் பிறகு.
1528. பரஸ்பர = ஒருவரோடு ஒருவர் இணைந்து, ஒத்துழைப்புடன், மற்றொருவர் உதவியுடன்.
1529. பராக்ரம: = வீரம், சூரத்தனம், தைர்யம், ஆக்கிரமித்தல்.
1530. பராஜய: = தோல்வி, படு தோல்வி.
1531. பராஜித = ஜெயிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட.
1532. பராத்பர = எல்லாவற்றுக்கும் மேலான.
1533. பராதீ4ன = பிறர் வசப்பட்ட, பிறரை அண்டியுள்ள.
1534. பராபர = முன்னும் பின்னும், மேலும் கீழும், அருகிலும் தொலைவிலும்.
1535. பராப4வ: = தோல்வி, மானபங்கம், அழிவு, அவமதிப்பு, பிரிந்துபோதல்.
1536. பராவர்த்த: = திரும்புதல், திரும்பி வருதல், திரும்பப் பெறுதல், மாற்றிக்கொள்ளுதல்.
1537. பராஹத = அடித்துத் தள்ளப்பட்ட, அடிக்கப்பட்ட.
1538. பரிகர: = சுற்றம், குடும்பம், சேர்க்கை, தொடக்கம், இடுப்பில் கட்டும் துணி.
1539. பரிகல்பித = நிர்ணயிக்கப்பட்ட, பகிர்ந்தளிக்கப்பட்ட, ஸ்திரமான, தீர்மானிக்கப்பட்ட.
1540. பரிகீர்ண = பரப்பப்பட்ட, சிதறுண்ட, சூழப்பட்ட.