1461. ந்யாய: = ஒழுங்கு, முறை, திட்டம், சட்டம், அரசாங்கம்.
1462. ந்யாஸ: = வைத்தல், ஸ்தாபித்தல், தள்ளி விடுதல், விட்டு விடுதல்.
1463. ந்யூனம் = குறைவான, குற்றமுள்ள.
1464. பக்வ = சமைக்கப்பட்ட, ஜீரணம் ஆகிய, பழுத்த, நிறைந்த.
1465. பங்கம் = சேறு, குழம்பிய மண், பாவம்.
1466. பங்கஜம் = பங்கேருஹம் = தாமரை.
1467. பங்கு3: = நொண்டி மனிதன், சனி கிரகம்.
1468. பச் = சமைக்க, ஜீரணிக்க, உணவு தயாரிக்க.
1469. பஞ்சதத்வம் = பஞ்சபூ4தம் = பூமி, ஜலம், வாயு, அக்னி, ஆகாசம்.
1470. பஞ்சத்வம் = அழிவு, மரணம்.
1471. பஞ்சபாண: = மன்மதன்.
1472. பஞ்சானன: = பஞ்சவக்த்ர = சிவன்.
1473. பஞ்சாம்ருதம் = ஐந்து இனிப்புப் பொருட்களின் கலவை.
1474. பஞ்சாச’த் = ஐம்பது.
1475. பஞ்ஜரம் = கூடு, கூண்டு.
1476. பட: = படம் = துணி, திரைச் சீலை.
1477. படலம் = கூரை மூடி, திரை, கூட்டம்.
1478. படு = திறமையுள்ள, கூர்மையான, அறிந்த.
1479. படுத்வம் = அறிவுத்திறன், திறமை.
1480. பட்டிகா = பலகை, தகடு, பட்டி, சட்டம், பத்திரம், பட்டியல்.