1441. ந்ருப: = ந்ருபதி: = அரசன், பிரபு, ஆளுபவன்.
1442. நேத்ரு = தலைவன், தலைமை தாங்குபவன்.
1443. நேத்ரம் = கண், கயிறு, பட்டு, ஆடை, வாஹனம், எஜமான், தலைவன்.
1444. நேதி3ஷு = நேதீயஸ் = மிக அருகில் உள்ள, மிக சமீபத்தில்.
1445. நேபத்யம் = ஆபரணம், அலங்காரம், நடிகர்கள் அலங்காரம் செய்து கொள்ளும் அறை.
1446. நேம: = அம்சம், பாகம், காலம், எல்லை, வேலி, கபடம், வஞ்சனை, அகழி, தீவு, துவாரம்.
1447. நேமி: = நேமீ = பரிதி, சுற்றளவு, பூமி.
1448. நைக3ம = வேதத்துடன் தொடர்பு உடைய.
1449. நைஜ = தன்னுடைய, தனக்கு சொந்தமான.
1450. நைபுண்யம் = திறமை, அறிவு, முழுமை.
1451. நைமித்திக = விசேஷ காரணத்தால், அசாதரணமான.
1452. நைரந்தர்யம் = நிரந்தரத்தன்மை, இடைவிடாத, தொடர்ந்த.
1453. நைர்கு3ண்யம் = குணம் இல்லாத, நற்குணம் இல்லாத.
1454. நைஷ்கர்ம்யம் = வேலையில்லாத, கர்மாவிலிருந்து விடுபட்ட.
1455. நைஷ்டிக = நிச்சயமான, நிர்ணயிக்கப்பட்ட, திடமான.
1456. நைஷ்டிக: = வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாதவன்.
1457. நைஸர்கி3க = இயற்கையான, உடன் பிறந்த.
1458. நோ = இல்லை, வேண்டாம்.
1459. நௌ = படகு, கப்பல்.
1460. நௌகா = சிறு படகு.