72. நீட3: to ந்ருதம்

1421. நீட3: = நீட3ம் = பறவைக்கூடு, படுக்கை, இருப்பிடம்.

1422. நீதி: = நீதி, ஒழுக்கம், நடத்தை, வழிமுறை, கொள்கை.

1423. நீரம் = தண்ணீர், சாறு.

1424. நீரஜம் = தாமரை, முத்து.

1425. நீராஜனம் = தீப ஆராதனை.

1426. நீல = நீலமான, கறுப்பான.

1427. நீலம் = துத்தம், கண் மை, விஷம்.

1428. நீலகண்ட2: = மயில், சிவன்.

1429. நீலலோஹித: = நீலக்3ரீவ: = சிவன்.

1430. நீலாம்ப3ரம் = பலராமன், சனீஸ்வரன், பிசாசு, அரக்கன், நீல நிற அல்லது கருப்பு நிற ஆடை அணிந்தவன்.

1431. நீலாம்பு3ஜம் = நீலோத்பலம் = கருநெய்தல் புஷ்பம்.

1432. நீலி = நீல நிறமான.

1433. நீவார: = செந்நெல், ஒரு தானியம்.

1434. நீஹார: = மூடு பனி, பனி.

1435. நுதி: = துதித்தல், புகழுதல், பாராட்டுதல், பூசித்தல்.

1436. நூதன = நவீனமான, புதிய, புதிதான, வியப்பான.

1437. நூனம் =அவசியம், சந்தேகமில்லாமல், நிச்சயமாக.

1438. நூபுர: = நூபுரம் = சிலம்பு.

1439. ந்ரு = மனிதன்.

1440. ந்ருதம் = ந்ருத்யம் = நடனம், நாட்டியம், அபிநயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *