70. நிர்வேத3: to நிஷ்காம

1381. நிர்வேத3: = வெறுப்பு, திகட்டல், திருப்தி, துக்கம், சோகம்.

1382. நிலய: = வசிக்கும் இடம், கூண்டு.

1383. நிவாரணம் = தடுத்தல், அப்புறப்படுத்துதல்.

1384. நிவாஸின் = வசிக்கின்ற, இருக்கின்ற, ஆடை அணிகின்ற.

1385. நிவ்ருத்தி : = திரும்புதல், மறைவு, தேக்கம், ஓய்வு, வைராக்கியம், பேரின்பம், விடுபடல்.

1386. நிவேத3னம் = தெரிவித்தல், அர்ப்பணித்தல், சமர்ப்பித்தல்.

1387. நிவேத்3யம் = நைவேத்3யம் = இறைவனுக்கு சமர்பிக்கும் நைவேத்யம்.

1388. நிவேச’னம் = நுழைதல், இருப்பிடம், வீடு, மணம் புரிதல்.

1389. நிசா’ = இரவு, மஞ்சள்.

1390. நிச்’சய = தீர்மானமான அபிப்பிராயம், திட நம்பிக்கை.

1391. நிச்’சல = அசையாத, திடமான, ஸ்திரமான.

1392. நிச்’சித = நிச்சயிக்கப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட.

1393. நிச்’வாஸ: = பெருமூச்சு, மூச்சு விடுதல்.

1394. நிஷாத3: = வேடன், சங்கீதத்தில் ஒரு ஸ்வரத்தின் பெயர்.

1395. நிஷித்3த4 = தள்ளிவைக்கப்பட்ட, தடுக்கப்பட்ட.

1396. நிஷூத3னம் = கொல்லுதல்.

1397. நிஷேவணம் = அனுபவித்தல், சேவகம், ஆராதனை, தொண்டுபுரிதல், பூசித்தல், அனுஷ்டித்தல்.

1398. நிஷ்கம் = தங்கம், தங்க நகை, தங்க நாணயம்.

1399. நிஷ்கர்ஷ: = வெளிக்கிளப்புதல், இழுத்தல், அளத்தல், நிச்சயித்தல்.

1400. நிஷ்காம = ஆசையற்ற.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *