121. இ: = மன்மதன்.
122. இங்கி3தம் = ஜாடை, குறிப்பு, சமிக்ஞை, மனதின் உள் எண்ணம்.
123. இதிஹாஸ: = சரித்திரம், காப்பியம், வீர கதை.
124. இந்தி3ரா = இலக்குமி தேவி.
125. இந்து3: = சந்திரன், ஒன்று என்னும் எண், கர்ப்பூரம்.
126. இந்து3ஜா = ரேவா என்னும் நர்மதை நதி.
127. இந்து3மௌலி = சிவபிரான்.
128. இந்து3வாஸர: = திங்கட்கிழமை.
129. இந்த்3ரஜாலம் = கண்கட்டு வித்தை, ஏமாற்று வித்தை.
130. இந்த்3ரத4னுஷ் = வானவில்.
131. இந்த்3ரநீலம் = விலை உயர்ந்த நீல நிற ரத்தினம்.
132. இந்த்3ரியம் = உடல் உறுப்புகள், புலன்கள், வலிமை, சக்தி, ஆண்மை.
133. இஷ்ட = விரும்பப்படும், நேசிக்கப்படும், பூஜிக்கப்படும்,கௌரவிக்கப்படும்.
134. இஷ்டி: = யாகம், பிரார்த்தனை, ஊக்கம், வேகம், ஆணை, அழைப்பு, விருப்பம்.
135.இக்ஷு: = கரும்பு.
136. இக்ஷ்வாகு: = அயோத்தியில் அரசு செய்த சூரிய குல மன்னர்களில் முதல் அரசன்.
137. ஈர்ஷா = பொறாமை, குரோதம்.
138. ஈசா’ன : = ஆள்பவன், யஜமானன், சிவன், சூர்யன், விஷ்ணு, திருவாதிரை நக்ஷத்திரம், எண் பதினொன்று.
139. ஈஸ்வர: = எஜமானன், அரசன், அரச குமாரன், கணவன், கனவான், பரம் பொருள், சிவன், மன்மதன்.
140. ஈக்ஷணம் = பார்த்தல், பார்வை, கண்.