1361. நிர்ணய: = நிச்சயித்தல், தீர்மானித்தல்.
1362. நிர்நேஜனம் = கழுவுதல், சுத்தம் செய்தல், பரிஹாரம் செய்தல்.
1363. நிர்விஷ்ட = குறிப்பிடப்பட்ட, நியமிக்கப்பட்ட, நிச்சயிக்கப்பட்ட .
1364. நிர்தோ3ஷ = குற்றமற்ற, மாசற்ற.
1365. நிர்த4ன = ஏழ்மையான, பொருளில்லாத.
1366. நிர்தா4ரணம் = நிர்ணயித்தல், நிச்சயித்தல்.
1367. நிர்ப3ந்த4: = வற்புறுத்துதல்.
1368. நிர்ப4ய = பயமில்லாத.
1369. நிர்ப4ர = அதிகமான, தீவிரமான.
1370. நிர்மல = தூய்மையான, சுத்தமான, களங்கமற்ற, அழுக்கற்ற.
1371. நிர்மாணம் = படைத்தல், அளத்தல், உற்பத்தி செய்தல்.
1372. நிர்மால்யம் = பூஜை பொருட்களின் மிகுதி, பூஜை செய்யப்பட்ட பூக்களின் மிகுதி, சுத்தமான தன்மை.
1373. நிர்முக்த = விடப்பட்ட, பற்றுக்களில் இருந்து விடுபட்ட.
1374. நிர்மூல = வேரில்லாத, ஆதாரமற்ற.
1375. நிர்மூலனம் = வேரோடு அழித்தல்.
1376. நிர்யாணம் = யாத்திரை, புறப்படுதல், பேரின்பம், விடுபடுதல், மோக்ஷம்.
1377. நிர்வசனம் = முதுமொழி, வழிமொழி, அட்டவணை, விளக்கம்.
1378. நிர்வாபணம் = கொட்டுதல், தெளித்தல், காணிக்கை, விதைத்தல், இளைப்பாறுதல்.
1379. நிர்வாஹ: = நிர்வாகம், போதுமானது, பூர்த்திசெய், நிறைவேற்று.
1380. நிர்வ்ருத்தி: = முழுமை, முடிவு, பேரின்பம்.