68. நிரஸனம் to நிர்ஜ்ஜர:

1341. நிரஸனம் = அப்பால் கடத்தல், அழித்தல், கொலை, அப்புறப் படுத்துதல்.

1342. நிராகார = உருவமற்ற, உருவமில்லாத.

1343. நிராகார: = பரம்பொருள், சிவன், விஷ்ணு.

1344. நிராகரணம் = நிராகரித்தல், கண்டனம், வெளியேற்றுதல்.

1345. நிராதங்க = பயமில்லாத, சுகமான, ஆரோக்யமான.

1346. நிராமய = பூரணமான, நோயற்ற, மாசற்ற, முழுமையான, சுத்தமான.

1347. நிராலம்ப3 = உதவியற்ற, சுதந்திரமான.

1348. நிரீக்ஷக: = பார்வை வைக்கும், விசாரிக்கும், ஒன்றின் மீது பார்வையைச் செலுத்தும்.

1349. நிரீக்ஷணம் = பார்வை, பார்த்தல், ஆலோசித்தல்.

1350. நிருக்தம் = விவரணம், விரிவுரை, ஆறு வேத அங்கங்களில் ஒன்று.

1351. நிருத்ஸுக = ஊக்கம் இல்லாத, அசட்டையான.

1352. நிருத்3த4 = தடை செய்யப்பட, அடக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட.

1353. நிரூட4 = தொன்றுதொட்டு வரும், பரம்பரையாக வந்த.

1354. நிரூடி4: = புகழ், கீர்த்தி, அறிமுகம், பயிற்சி, தேர்ச்சி, சாமர்த்தியம்.

1355. நிரூபணம் = பார்வை, பார்த்தல், அலசிப்பார்த்தால், தேடுதல், நிரூபித்தல், விவரமாகக் கூறுதல்.

1356. நிரோத4னம் = சூழ்தல், தடை செய்தல், நாசமாக்குதல், அழித்தல், அடக்குதல்.

1357. நிர்க3மனம் = வெளியே செல்லுதல்.

1358. நிர்கு3ண = நற்குணம் இல்லாத, கெட்ட.

1359. நிர்ஜன = மனிதர்களே இல்லாத, தனி இடமான.

1360. நிர்ஜ்ஜர: = நீரூற்று, நீர் வீழ்ச்சி, யானை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *