1281. நாச’: = மறைவு, அழிவு, நாசமடைதல், துரதிர்ஷ்டம், கை விடுதல்.
1282. நாஸிகா = மூக்கு.
1283. நாஸ்தி = இல்லை, இன்மை.
1284. நாஸ்திக: = நாத்திகன், கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.
1285. நிகட: = நிகடம் = அருகாமை.
1286. நிகாம: = அதிகமாக, மிகுதியாக, விருப்பப்படி.
1287. நிகாஸ: = தோற்றம், பார்வை, தொடுவானம், அருகாமை.
1288. நிக்ருதி: = கெட்ட தன்மை, நிராகரித்தல், அவமதித்தல், ஏழ்மை, வசை, திட்டுதல்.
1289. நிக்ருந்தனம் = வெட்டுதல், நஷ்டமாக்குதல், வெட்டும் கருவி.
1290. நிகேதனம் = வீடு, இருப்பிடம், மாளிகை.
1291. நிகி2ல: = முழுதும், முழுமையாக.
1292. நிக3ம: = வேதம், வேத வாக்கியம், வேதத்தின் உரை, நம்பிக்கை, தொழில், கூட்டம், சந்தை, அங்காடி, நகரம்.
1293. நிகூ3ட3 = மறைக்கப்பட்ட, ரகசியமான.
1294. நிக்3ரஹ் = அடக்குதல், அழுத்துதல், ஓடிப்பிடித்தல், சிறையில் வைத்தல்,திட்டுதல், கண்டிப்பு, அருவருப்பு.
1295. நிக4ண்டு = நிகண்டு, அகராதி.
1296. நிஜ = இயற்கையாக ஏற்பட்ட, உடன் பிறந்த, தன்னுடைய, விசே ஷமான, தனித்தன்மை வாய்ந்த.
1297. நிடிலம் = நெற்றி.
1298. நிதம்ப3 : = பிருஷ்டம், மலைச் சரிவு, நதியோரம், தோள்பட்டை.
1299. நிதராம் = முழுதும், அதிகமாக, நிரந்தரமாக, நிச்சயமாக, தொடர்ந்து.
1300. நிதாந்த = அசாதாரணமான, தீவிரமான.