64. நாகு: to நால:

1261. நாகு: = எறும்புப் புற்று.

1262. நாக3: = நல்லபாம்பு, யானை, மேகம், எண் ஏழு , கடுமையான மனிதன்.

1263. நாக3ர = நாக3ரிக = நாக3ரக = நல்ல, கெட்டிக்கார, தந்திர, நகரத் தொடர்புள்ள.

1264. நாடகம் = நாடகம், கூத்து, பிரபந்தம்.

1265. நாடி3: = நாடீ3 = தாமரைத் தண்டு, உடலில் உள்ள நாடி, தமனி, குழல், புல்லாங்குழல்.

1266. நாணகம் = காசு, நாணயம்.

1267. நாதிதூ3ர = வெகு தூரத்தில் இல்லாத.

1268. நாத2: = எஜமானன், ரக்ஷிப்பவன், கணவன், மூக்கணாங்கயிறு.

1269. நாத3: = சப்தம், கர்ஜனை, கூச்சல், ஸ்வரம்.

1270. நானா = பலவிதமான, பலமுறைகளில், தனிதனி உருவில்.

1271. நாந்தீ3 = மகிழ்ச்சி, நலம், சுபகாரியங்களுக்கு முன்பு செய்யப்படும் சடங்கு / பிரார்த்தனை.

1272. நாபித: = நாவிதன்.

1273. நாபி4: = தொப்புள், முக்கிய இடம், நடு இடம், கேந்திரம், முக்கியமானவன்.

1274. நாமகரணம் = பெயரிடுதல்.

1275. நாமதே4யம் = பெயர்.

1276. நாயக : = வழி காட்டி, தலைவன், எஜமான், கணவன், காப்பியத்தின் கதாநாயகன்.

1277. நாரங்க3: = நாரத்தை மரம், காமுகன், இரட்டைப் பிள்ளைகளில் ஒருவன்.

1278. நாரிகேல: = நாலிகேர: = நாரிகேர: = தென்னை மரம், தேங்காய்.

1279. நாளம் = தண்டு, குழாய், கைப்பிடி.

1280. நால: = பம்பு, குழாய், வாய்க்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *