1241. நரபுங்க3வ: = நரசா’ர்து3ல: = தலை சிறந்த மனிதன்.
1242. நரகேஸரின் = நரசிம்ஹ: = நரஹரி = நரசிம்ஹ அவதாரம்.
1243. நரக: = நரகம்.
1244. நர்த்தக: = நர்த்தன: = நாட்டியக்காரன்.
1245. நர்த்தனம் = அபிநயம், நடனம்.
1246. நலினம் = தாமரைப்பூ, அல்லிப்பூ, தண்ணீர்.
1247. நவ = நவீன = நவ்ய = புதிய, நவீன, தற்காலத்திய.
1248. நவகம் = ஒன்பது பதார்த்தங்களைக் கொண்டது.
1249. நவதி: = நவதீ = நவதிகா = தொண்ணூறு.
1250. நவதா4 = நவச’: = ஒன்பது வகையான, ஒன்பது மடங்கு.
1251. நவன் = ஒன்பது.
1252. நவநிதி4: = குபேரனுடைய ஒன்பது பொக்கிஷங்கள்.
1253. நவநீதம் = புதிய வெண்ணை.
1254. நவம = ஒன்பதாவதான.
1255. நவரத்னம் = முத்து, மாணிக்கம், வைரம், வைடூர்யம்,கோமேதகம், பவழம், புஷ்பராகம், மரகதம், நீலம் ஆகிய ஒன்பது ரத்தினங்கள்.
1256. நச்’வர = அழியக்கூடிய, சாஸ்வதமில்லாத, திடமில்லாத.
1257. நஷ்ட = மறைந்துபோன, வீணாகப் போன, ஓடிப்போன, பறந்துபோன,பாழடைந்த.
1258. நஸ்யம் = மூக்குப்பொடி.
1259. நஹி = இல்லவே இல்லை, நிச்சயமாக இல்லை.
1260. நாக: = சுவர்க்கம், ஆகாயமண்டலம்.