67. நிபோ3த4: to நிரவதி4

1321. நிபோ3த4: = அறிதல், புரிந்து கொள்ளுதல், தெரிவித்தல்.

1322. நிப்4ருத = வைக்கப்பட்ட, மூடப்பட்ட, அமைதியான, ஸ்திரமான, அசைவற்ற, திடமான், சுகுணமுள்ள, தனிப்பட்ட.

1323. நிமக்3ன = மூழ்கிப்போன, அமுக்கப்பட்ட, முக்கியமற்ற.

1324. நிமந்த்ரணம் = அழைப்பு, கூப்பிடுதல், ஆஜராக உத்தரவு.

1325. நிமித்தம் = காரணம், நோக்கம், அடையாளம், குறி.

1326. நிமிஷ: = கண் இமைத்தல், கண் இமைக்கும் நேரம்.

1327. நிமீலனம் = இமை கொடுத்தல், கண்களை மூடுதல், பூரண சந்திர கிரஹணம்.

1328. நிம்ப3: = வேப்பமரம்.

1329. நியதி: = அடக்கல், அதிர்ஷ்டம், தலைவிதி, புலன் அடக்குதல்.

1330. நியந்த்ரு = எஜமானன், ஆளுபவன், தலைவன், ரதம் ஓட்டுபவன்.

1331. நியமனம் = தண்டித்தல், கட்டுப் படுத்துதல், ஆணையிடுதல், எல்லை , வரம்பு முறை, விதிமுறை.

1332. நியோக3: = ஒரு காரியத்தில் கட்டுண்டிருத்தல், இணைப்பு, செயல், முயற்சி.

1333. நிரந்குச’ = தன்னிச்சைப்படி, சுதந்திரமான, கட்டுக்கடங்காத.

1334. நிரதி: = அன்பு, ஆசை, பக்தி.

1335. நிரதிச’ய = இணையற்ற, ஒப்பற்ற, அசாதரணமான.

1336. நிரந்தரம் = இடைவிடாது, தொடர்ந்து, எப்போதும்.

1337. நிரபராத4 = குற்றமற்ற, மாசற்ற.

1338. நிரபேக்ஷ = பற்றில்லாத, ஆசைகள் இல்லாத, இச்சையற்ற.

1339. நிரர்த2க = உபயோகமற்ற, பொருளற்ற.

1340. நிரவதி4 = எல்லையற்ற, முடிவில்லாத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *