1221. நக3ரம் = நக3ரீ = பட்டணம், நகரம்.
1222. நகா3தி4ப = நகே3ந்த்3ர = இமயமலை.
1223. நக்3ன = நக்3னக = ஆடை இல்லாத.
1224. நட: = நடிகன், நடனம் ஆடுபவன், அசோகமரம், நாணல்.
1225. நடீ = நாட்டியக்காரி, நடிகை.
1226. நத = வளைந்த, வணங்கிய, மூழ்கிய, சாய்ந்த, கோணலான.
1227. நத்3 = சப்தம் செய்ய, ஒலி எழுப்ப, சொல்ல, கேட்க, நடுங்க.
1228. நத்3த4 = கட்டப்பட்ட, உடுத்திக் கொள்ளப்பட்ட, கட்டுண்ட.
1229. நந்த3: = மகிழ்ச்சி, சுகம், யாழ், விஷ்ணு, தவளை.
1230. நந்தா3 = மகிழ்ச்சி, ஆனந்தம், செழுமை, கணவனின் சஹோதரி, பார்வதி.
1231. நந்தி3: = சிவன், விஷ்ணு , நந்தி தேவன், சூதாட்டம்.
1232. நந்தி3னீ = மகள், கணவனின் சஹோதரி, தெய்வீகப் பசு, கங்கை, கருப்பு துளசி.
1233. நம்புஸக: = நம்புஸகம் = அலி, பேடி.
1234. நப்த்ரு = பேரன்.
1235. நப4ஸ: = ஆகாயம், மழைக்காலம், கடல்.
1236. நமஸ்கார: = நமஸ்க்ருதி: = வணங்குதல், நமஸ்கரித்தல்.
1237. நம்ர = வினயமுள்ள, வணங்கிய, கோணலான, பக்தியுள்ள.
1238. நய: = தலைமை தாங்குதல், வழி நடத்துதல், அரசியல் திறன்.
1239. நயனம் = வழி காட்டுதல், தலைமை தங்குதல், ஆளுதல், அடைதல், கண்.
1240. நராதி4ப: = நரபதி: = நரேந்த3ர = நரேச: = அரசன்.