1301. நித்ய = நிரந்தரமான, சாஸ்வதமான, அழிவற்ற, மாறாத, அவசியமான, தவிர்க்க முடியாத, குறிக்கப்பட்ட.
1302. நித்யத்வம் = ஸ்திரத் தன்மை, சாஸ்வதமானது, இடைவிடாதது, அவசியமானது.
1303. நித3ர்ஷக : = பார்க்கின்ற, நிரூபித்துக் காட்டும், குறிப்பிடும், குறித்துக்காட்டும்.
1304. நித3ர்ச’னம் = தோற்றம், பார்வை, பிரமாணம், சாக்ஷி, உவமை, உதாரணம், சகுனம், சட்டம், விதி,அடையாளம்.
1305. நிதா3னம் = நாடா, பட்டி, கயிறு, முதன்மையான காரணம், முடிவு, புனிதத் தன்மை, சுத்தம்.
1306. நிதே3ச’: = ஆணை, கட்டளை, பேச்சு, வர்ணனை, அருகாமை, சுற்றுப்புறம், பாத்திரம்.
1307. நித்3ரா = தூக்கக் கலக்கம், தூக்கம்.
1308. நித4ன = ஏழையான.
1309. நித4ன: = நிதனம் = அழிவு, நாசம், ஆபத்து, கெடுதி, முடிவு, முடித்தல்.
1310. நிதி4: = வீடு, வசிக்குமிடம், இருப்பிடம், கஜானா, கடல், விஷ்ணு.
1311. நிநத3: = நிநாத3: = சப்தம், குரல், வண்டுகளின் ரீங்காரம்.
1312. நிந்தா3 = மாசு கற்பித்தல், குறி சொல்லல், வசை, பழித்தல்.
1313. நிந்தாஸ்துதி = வஞ்சப் புகழ்ச்சி, ஒரு சொல்லணி.
1314. நிபதனம் = கீழே விழுதல், கீழே பறத்தல், கீழிறங்குதல்.
1315. நிபாத: = கீழே விழுதல், ஆக்கிரமித்தல், குதித்தல், எரிதல், பொழிதல், விழுதல், ஒழுங்கின்மை .
1316. நிபுண: = திறமையுள்ள, கெட்டிக்கார, படித்தறிந்த, நுட்பமான, மிருதுவான, சரியான, முடிந்த, குறைவற்ற.
1317. நிப3ந்த4: = கட்டுதல், இறுக்குதல், பற்று, நேசம், விலங்கு.
1318. நிப3ந்த4னம் = ஒன்று சேர்த்துக்கட்டுதல், அமைதல், நிர்மாணித்தல், கைது செய்தல், இயற்றல், ஒழுங்கு படுத்துதல், கவிதை, புத்தகம், தலைமுடியின் முடிச்சு, விரிவுரை.
1319. நிப3ர்ஹனம் = கொல்லுதல், அழிதல்.
1320. நிபி3ட3 = நெருக்கமான, கடினமான.