1201. த்4ருதி: = எடுத்தல், பிடித்தல், கைவசம் ஆக்குதல், ஸ்தாபித்தல், தாங்குதல், உதவுதல், தைரியம், ஊக்கம், துணிவு, அடக்கம், மகிழ்ச்சி, உறுதி, சுகம், யாகம், சந்தோசம்.
1202. தே4னுகா = பெண் யானை, பால் தரும் பசு.
1203. தை4ர்யம் = உறுதி, துணிச்சல், அமைதி, அடக்கம் , பொறுமை.
1204. தை4வத்வம் = சாமர்த்தியம், திறமை.
1205. தோ4ரணி: = தோ4ரணி = தொடர்ந்துள்ள வரிசை, பாரம்பரியம்.
1206. த்4யானம் = தியானித்தல், ஆலோசித்தல், சிந்தித்தல்.
1207. த்4ருவ: = துருவ நட்சத்திரம், தீர்க்க ரேகை, ஆலமரம், கட்டு முளை, பிரமன், விஷ்ணு, சிவன், பாட்டின் முதல் அடி.
1208. த்4ருவம் = ஆகாயம், காற்று மண்டலம், விண்வெளி, சுவர்க்கம், அவசியமாக, நிச்சயமாக.
12009. த்4வஜ: = கொடி, மரியாதைக்கு உரிய மனிதர், அடையாளம்.
1210. த்4வனி: = ஒலி, எதிரொலி, கூச்சல், இசையின் நாதம், கர்ஜனை, சொல், உட்பொருள்.
1211. த்4வமஸ: = த்4வம்ஸனம் = நாசம், அழிதல், இழப்பு.
1212. ந = மெலிந்த, ஒல்லியான, காலியான, சூனியமான, பிரிக்கப்படாத, புகழப்படாத.
1213. ந: = முத்து, விநாயகர், சொத்து, செல்வம், போர்.
1214. நகுல: = கீரிப்பிள்ளை, நான்காவது பாண்டவன், மகன், சிவன்.
1215. நக்தம் = இரவில், இரவுப் பொழுதில்.
1216. நக்தச்சர: = இரவில் திரியும் விலங்கு, திருடன், அரக்கன்.
1217. நக்தாஞ்ஜரீன் = பூனை, ஆந்தை, திருடன், பேய், பிசாசு, அரக்கன்.
1218. நக்ரம் = முதலை.
1219. நகம் = கை, கால் விரல்களின் நகம்.
1220. நக3: = மலை, மரம், செடி, சூரியன், பாம்பு, ஏழு என்னும் எண்.