60. தா4ன்யம் to தூ4லி

1181. தா4ன்யம் = தானியம், நெல், அரிசி.

1182. தா4மன் = இருப்பிடம், இடம், வீடு, காந்தி, ஒளி, புகழ், சக்தி, உடல், பேட்டை, தளம், கூட்டம், நிலை, நிலைமை.

1183. தா4ரணா = சமாளித்துக்கொள்ளல், உதவி செய்தல், ரட்சித்தல், ஞாபக சக்தி, மன வலிமை, பக்தி, கூர்மை, ஒழுங்கு.

1184. தா4ரா = நீரோட்டம், மழை, தாரை, ரேகை, ஒழுக்கு, ஓரம், எல்லை, கத்தி /வாள் முனை, சக்கரம், பரிதி, வேலி, புகழ், இரவு.

1185. தா4ர்மிக = நற்குணம் படைத்த.

1186. தா4வ = ஓட, தாவ, முன் செல்ல, ஆக்ரமிக்க,மோத, துவைக்க.

1187. தி4ஷணா = பேச்சு, துதி, புத்தி, அறியும் சக்தி, பூமி, கோப்பை.

1188. தீ4: = புத்தி,கற்பனை, மனம், பக்தி, பிரார்த்தனை, யாகம்.

1189. தீ4ர = தைரியமான, நிலையான, உறுதியான, திடமான, அமைதியான, சாந்தமான, கம்பீரமான, கெட்டிக்கார, ஆழ்ந்த.

1190. தீ4ரம் = குங்குமப்பூ

1191. தீ4ர: = கடல், சிந்தனைத் திறன், ஆன்மா.

1192. தீ4ரதா = தீ4ரத்வம் = தைரியம், மனவலிமை, அமைதி மனப் பான்மை.

1193. து4னி: = து4னீ = ஆறு.

1194. து4ர் = நுகத்தடி, கடையாணி, சுமை, பளு, முக்கிய இடம், உச்சி, சிகரம்.

1195. து4ரிண: = பாரம் சுமக்கும் பிராணி, தலைவன், முக்கியமனிதன்.

1196. தூ4 =ஆட்ட, கிளற, அசைக்க, தள்ள, எரிய, அடிக்க, விசிற.

1197. தூ4ப் = புகைதர, வாசனையாக்க, பிரகாசிக்க, மணமுள்ளதாக்க.

1198. தூ4ம: = புகை, ஆவி, வால் நட்சத்திரம், தூமகேது, ஏப்பம்.

1199. தூ4ர்த்த: = மோசக்காரன், போக்கிரி, சூதாடி, ரசிகன், காதலன்.

1200. தூ4லி = தூசி, பொடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *