6. ஆலம்ப3னம் to ஆக்ஷேப:

101. ஆலம்ப3னம் = தாங்கல், ஆதாரம், தூண்.

102. ஆலயம் = இடம், வீடு, இருப்பிடம், ஆசனம்.

103. ஆலஸ்யம் = சோம்பல், மந்தகதி.

104. ஆலாபனம் = விஸ்தாரமாகப் பேசுதல், பாடுதல்.

105. ஆலிங்க3னம் = கட்டிக்கொள்ளுதல், தழுவுதல்.

106. ஆலோகனம் = பார்வை, பார்ப்பது, காந்தி, புலவனின் புகழ்ச்சொல்.

107. ஆவரணம் = மறைத்தல், முடித்தல், வேலி, படுதா, திரை, கேடயம்.

108. ஆவர்த்தனம் = சுற்றுதல், திரும்புதல், கடைதல், உருக்குதல், மனனம் செய்தல், படித்தல், வட்டமான சலனம்.

109. ஆவாஹனம் = கூப்பிடுதல், அழைத்தல், தேவதைகளை வரவழைத்தல்.

110. ஆவிர்ப4வ: = உண்டாக்குதல், அவதரித்தல், அவதாரம் செய்தல்.

111. அசௌ’சம் = தீட்டு, தூய்மை இன்மை.

112. ஆச்’ரயம் = புகலிடம், இளைப்பாருமிடம், கொள்ளுமிடம், பெறுபவன், போஷிப்பவன்.

113. ஆச்’விநேயௌ = தேவர்களின் இரட்டை வைத்தியர்கள் அச்விநீ குமாரர்கள், நகுல சஹாதேவர்கள்.

114. ஆஸக்த = மிகுந்த பாசம் உடைய, நிச்சயிக்கப்பட்ட, ஈடுபாடு கொண்ட, நிரந்தரமான, தொடர்ந்த.

115. ஆஸங்க: = இணைதல், சேருதல், கூடுதல், உடன் இருத்தல், தொடர்பு, சம்பந்தம்.

116. ஆஹரணம் = அருகில் கொண்டு வருதல், பிடித்துக் கொள்ளல், எடுத்தல், பூர்த்தி செய்தல், வரதக்ஷிணை.

117. ஆஹுதி: = ஒரு தேவதைக் குறித்து யாகத்தின் போது அக்னியில் ஹோமகுண்டத்தில் அர்ப்பணம் செய்யப்படுவது.

118. ஆஹூதி: = கூப்பிடுதல், அழைத்தல்.

119. ஆஹோபுருஷிகா = அதிகமான அஹங்காரம், படை சம்பந்தப் பட்ட தற்பெருமை.

120. ஆக்ஷேப: = எறிதல், வசீகரித்தல், ஆக்ஷேபித்தல், தூஷித்தல், நிந்தித்தல், சந்தேஹம், சங்கேதம், யூகம், அனுமானம், மறுப்பு, எதிர்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *