1161. த4மனி = த4மனீ = நாணல், கழுத்து, உயிர்நாடி, ரத்தக் குழாய்.
1162. த4ர: = மலை, பஞ்சுக்குவியல், சுமப்பவன், கூர்மாவதாரம்.
1163. த4ரணி: = த4ரணீ = பூமி, தரை, மண்.
1164. த4ரணீத4ர: = ஆதிசே ஷன், விஷ்ணு, மலை, ஆமை, அரசன்.
1165. த4ரணீஸுத: = செவ்வாய் கிரகம், நரகாசுரன்.
1166. த4ர்ம: = மதம், கருமம், கடமை, ஒழுக்கம், பழக்கம், வழக்கம்,
யுதிஷ்டிரர், யமதர்மன்.
1167. த4ர்மசாரிணீ = த4ர்மபத்நீ = மனைவி.
1168. த4ர்மஞ = தர்ம விதிகளை அறிந்த.
1169. த4ர்மத: = சரியான வழியில், தர்மமான முறையில்.
1170. த4ர்மஸம்ஹிதா: = த4ர்மசா’ஸ்த்ரம் = அறநூல், தர்ம சாஸ்திரம்.
1171. த4ர்மாத்மன் = ஒழுக்கமுடைய, புண்ணியசாலியான.
1172. த4ர்மிஷ்ட: = மத, தர்ம காரியங்களில் ஈடுபடும்.
1173. த4ர்ஷ: = துணிவு, மமதை , கர்வம், அவமதித்தல், பெண்ணை பலவந்தம் செய்தல்.
1174. த4ர்ஷணம் = பிடிவாதம், தைர்யம், அவமதிப்பு, அவமானம், அக்கிரமித்தல், பலாத்காரம், வசை, நிந்தித்தல்.
1175. த4வ: = ஆட்டம், உதறல், மனிதன், கணவன், யஜமானன், போக்கிரி, ஏய்ப்பவன்.
1176. த4வள: = வெண்மை, உயர்ந்த ரக எருது, சீனநாட்டுக் கற்பூரம், தவ என்னும் மரம்.
1177. தா4 = வைக்க, தாங்க, அமைக்க, இழைக்க, பொறுக்க, அடுக்க, கொடுக்க, பிடிக்க, இயற்ற.
1178. தா4து = ஆதரப் பொருள், மூலதத்வம், பூமி, நீர், அக்னி, காற்று, ஆகாயம், ரசம், ஆன்மா, பரமாத்மா, அறிவுப்புலன், எலும்பு, பார்த்தல், ருசித்தால், கேட்டல், தொடுதல், நுகர்தல்.
1179. தா4த்ரு = நிர்மாணிப்பவன், இயற்றுபவன், நடத்துபவன், தாங்குபவன், படைப்பவன், ரக்ஷிப்பவன், விஷ்ணு, பிரம்மா.
1180. தா4த்ரீ = வளர்ப்புத் தாய், செவிலித்தாய், பூமி, நெல்லிமரம்.