56. தோ3ஷஞ to த்3ரஷ்டவ்ய

1101. தோ3ஷஞ = கற்றறிந்தவன், வைத்தியன்.

1102. தோ3ஷா = கை, புயம், இரவு, இருட்டு.

1103. தோ3ஹ: = கறத்தல், பால்.

1104. தோ3ஹத3ம் = மசக்கை, விருப்பம், கர்ப காலம்.

1105. தோ3ஹனம் = பால் கறத்தல்.

1106. தௌ3ர்ப3ல்யம் = பலவீனம்.

1107. தௌ3ர்பா4க்யம் = துரதிர்ஷ்டம்.

1108. தௌ3ர்ஹ்ருத3ம் = கெட்ட எண்ணம், பகைமை, கர்ப்ப காலம், கர்பிணியின் விருப்பம்.

1109. தௌ3ஹித்ர: = பெண் வயிற்றுப் பேரன்.

1110. தௌ3ஹித்ரீ = மகள் வயிற்றுப் பேத்தி.

1111. த்4யு = நாள், ஆகாயம், பிரகாசம், சுவர்க்கம்.

1112. த்4யுதி: = ஒளி, ஒளிக்கதிர், பிரகாசம், காந்தி.

1113. த்4யூதம் = சூதாடுதல், சொக்கட்டான் ஆடுதல்.

1114. த்4யூதகர: = சூதாடி.

1115. த்4யோத: = வெளிச்சம், உஷ்ணம், புகை.

1116. த்3ரப்ஸ: = சொட்டு, துளி.

1117. த்3ரப்ஸம் = நீர் கலந்த தயிர், மோர்.

1118. த்3ரவ: = சொல்லுதல், திரிதல், பரவுதல், சொட்டுதல், கசிதல், திரவம்.

1119. த்3ரவிணம் = செல்வம், திரவியம், தங்கம்.

1120. த்3ரஷ்டவ்ய = பார்க்கத் தகுந்த, பிரியமான, அழகான.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *