1041. து3ரதிக்ரம = வெல்ல முடியாத, அடக்க முடியாத.
1042. து3ராக்ரமணம் = தகுதி அற்ற ஆக்கிரமிப்பு.
1043. து3ராத்மன் = கெட்ட நடத்தையுள்ள.
1044. து3ராஸத3: = நெருங்க முடியாத, ஜெயிக்க முடியாத, நிகரற்ற, இணை அற்ற.
1045. து3ர்க3தி = கெட்ட காலம், கெடுதி ஏழ்மை, கஷ்டம், நரகம், கடினமான பாதை.
1046. து3ர்க3ந்த4: = துர் நாற்றம், நாற்றம், வெங்காயம்.
1047. து3ர்நிமித்தம் = கெட்ட சகுனம்.
1048. து3ர்ப4ல: = வலிமைஅற்ற, சக்தி இல்லாத, மெலிந்த.
1049. து3ர்பு3த்3தி4 = கெட்ட புத்தி.
1050. து3ர்பி4க்ஷம் = பஞ்சம், மழை பொய்த்தல்.
1051. து3ர்மதி: = முட்டாள், மடையன், அறிவிலி.
1052. து3ர்மரணம் = கெட்ட சாவு.
1053. து3ர்முக: = குதிரை, சிவனின் ஒரு பெயர்.
1054. து3ர்வஹ = பளுவான.
1055. து3ர்வ்ருத்தி = கெட்ட நடத்தை.
1056. து3ரோத3ரம் = சூதாட்டம், சொக்கட்டான்.
1057. து3ஷ் = பாவம் செய்ய, கெட்டுப் போக, தூய்மையற்ற, தூஷிக்கப்பட்ட.
1058. து3ஷ்ட= வீணான, அடிபட்ட, மதிக்கப்படாத, போக்கிரியான, மட்டமான, கீழான.
1059. து3ஷ்கரம் = செயற்கரிய செயல்.
1060. து3ஷ்சரித = கெட்ட நடத்தையுள்ள.