1021. தி3வ்ய = தெய்வீகத்தன்மை வாய்ந்த, ஆகாயம், சபதம் செய்தல், கிராம்பு.
1022. தி3வ்யாங்க3னா = தேவலோகப் பெண், அப்சரஸ்.
1023. தி3சா’ = திக்கு, திசை, பிரதேசம்.
1024. தி3ஷ்டி: = பகிர்ந்து அளித்தல், வழி காட்டுதல், உத்தரவிடுதல், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, சுபகாரியம்.
125. தீ3ன = ஏழையான, துக்கம் அடைந்த, துன்பம் அடைந்த, சோகம் அடைந்த, அதிர்ஷ்டம் இல்லாத.
1026. தீ3ப: = விளக்கு, பிரகாசம்.
1027. தீ3பகம் = குங்குமப்பூ, ஒரு சொல்லணி.
1028. தீ3பிகா = பிரகாசம், தீவட்டி, விருத்தி உரை நூல்.
1029. தீ3ப்தி = பளபளப்பு, ஒளி, அரக்கு, பித்தளை.
1030. தீ3ர்க்கம் = நீண்ட, அதிகமான, நீண்ட காலத்து.
1031. தீ3ர்க்க4: = ஒட்டகம், நெடிய உயிரெழுத்து.
1032. தீ3ர்க4பாத3ப: = தென்னை, பனை, பாக்கு மரங்கள்
1033. தீ3ர்க்க4ஸூத்ரின் = சோம்பேறியான, மந்தமான, மெத்தனமான.
1034. தீ3ர்கா4யுஸ் = நீண்ட ஆயுள்.
1035. தீ3க்ஷா = சுத்தி செய்துகொள்ளல், மதச் சடங்குக்காக அர்ப்பணித்தல்.
1036. தீக்ஷித: = தீக்ஷை பெற்றவர், சீடன்.
1037. து3:க்கம் = வருத்தம், பீடை, வேதனை. கஷ்டம்.
1038. து3கூலம் = வெண் பட்டு.
1039. து3க்3த4ம் = பால், மரங்களிலிருந்து வடிக்கப்பட்ட ரசம்.
1040. து3ந்து3பி4 = பேரிகை, கிருஷ்ணனின் ஒரு பெயர், விஷ்ணுவின் ஒரு பெயர், ஒரு அரக்கனின் பெயர்.