981. த3சா’ = ஆடையின் ஓரம், விளக்கின் திரி, காலம், நிலை, கோள்களின் நிலை.
982. த3சா’ந்த: = திரியின் முடிவு பாகம், வாழ்க்கையின் இறுதி.
983. த3ஹனம் = எரிதல், எரித்து முடித்தல்.
984. த3ம்ச’: = கடித்தல், பாம்பு கடித்தல், கிழித்தல், காட்டு ஈ, தோஷம், பல், கவசம், குறைபாடு.
985. த3ம்ச’க: = நாய், பெரிய ஈ.
986. த3ம்ஷ்ட்ரா = பெரியபல், கோரைப்பல், யானையின் பல்.
987. த3ம்ஷ்ட்ரின் = பாம்பு, காட்டுப்பன்றி.
988. த3க்ஷ: = ஒரு பிரஜாபதியின் பெயர், கோழி, நெருப்பு, கெட்டிக்காரன், சிவன்.
989. த3க்ஷிண = வலது, தெற்கான, நிபுணனான, நேர்மையுள்ள, சாமர்த்தியமுள்ள.
990. த3க்ஷிண: = வலக்கை, ஒழுக்கம் உள்ள நல்ல மனிதன், சிவன், விஷ்ணு.
991. த3க்ஷிணா = காணிக்கை, தானம், அந்தணருக்குக் கொடுக்கப்படும் தக்ஷிணை, பால் நிறையத் தரும் பசு, தென் திசை, நாட்டின் தென் பகுதி.
992. த3க்ஷிணாயனம் = சூரியன் பூமத்திய ரேகைக்குத் தெற்க்கே செல்லும் 6 மாத காலம்.
993. த3க்ஷிணா மூர்த்தி = சிவபிரான்.
994. தா3 = கொடுக்க, ஒப்புவிக்க, விட்டுவிட, வைக்க, அனுமதி அளிக்க, திருமணத்தில் தர.
995. தா3டி3கா = தாடி.
996. தா3டி3ம: = மாதுளை மரம்.
997. தா3டிமம் = மாதுளம் பழம்.
998. தா3த்ரு = கொடுப்பவன், கடன் தருபவன், உபாத்தியாயர்.
999. தா3னம் = கொடுத்தல், சமர்பித்தல், ஒப்படைத்தல், உதவி, தானம், ரக்ஷணை, காத்தல் .
1000. தா3னவ: = அரக்கன்.