5. ஆட3ம்ப3ர: to ஆர்யா:

81. ஆட3ம்ப3ர: = கர்வம், வெளிப்பகட்டு , கோபம், ஆவேசம், சந்தோஷம், மேகத்தின் கர்ஜனை, யானையின் பிளிறல், யுத்த பேரிகை.

82. ஆதங்க3: = நோய், பீடை, வேதனை, பயம், மிருதங்க ஓசை.

83. ஆதுர = பீடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, பாதிக்கப்பட்ட, நோயுற்ற, பலவீனமான.

84. ஆத்மன் = ஆன்மா, உயிர், தான் என்னும் எண்ணம், பரமாத்மா, ஸாரம், நடத்தை, மனம், புத்தி, சக்தி, வலிமை, உருவம், மகன், சூரியன், அக்னி, வாயு.

85. ஆத3ர: = மரியாதை, பூஜ்யத்தை, உத்சாஹம், கவனம், ஊக்கம், முயற்சி, அன்பு, ஆரம்பம்.

86. ஆதி3த்ய: = அதிதியின் மகன், தேவன், சூரியன், வாமனன், புனர்வசு நக்ஷத்திரம்.

87. ஆதா4ர: = ஆதாரம், பிடிப்பு, உதவி, ரக்ஷணை, பாத்திரம், அணை, கால்வாய்.

88. ஆதி4பத்யம் = எஜமானத்தன்மை, பிரபுத்தன்மை, எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாதாக இருப்பது, அரசனின் கடமைகள்.

89. ஆதி4பெள3திக = பிராணிகளால் ஏற்படும் (துன்பம் முதலியன), பிராணிகள் தொடர்புடைய, பௌதிக. அடிப்படையான.

90. ஆத்4யாத்மிக = பரமாத்மாவுடன் தொடர்புடைய, ஆன்மீக, பரிசுத்தமான, புனிதமான, மனதுடன் தொடர்புடைய.

91. ஆனனம் = வாய், முகம், ஒரு நூலின் ஒரு பெரிய பகுதி.

92. ஆந்தோ3ளிக = ஊஞ்சல், பல்லக்கு.

93. ஆப்த = கிடைப்பெற்ற, அடையப்பெற்ற, பிடிக்கப்பட்ட, நம்பிக்கைக்குப் பாத்திரமான, கெட்டிக்காரனான, பழகிய.

94. ஆபா4ஸ: = பிரகாசம், பிரதிபிம்பம், ஒற்றுமை, உண்மையற்ற வாதம், தப்பானவாதம்.

95. ஆமந்த்ரணம் = அழைத்தல், வரவேற்றல், விடைபெறுதல், வணக்கம் தெரிவித்தல், அனுமதி, உரையாடல்.

96. ஆயதனம் = இடம், வீடு, வேள்விச்சாலை, மேடை, வேதிகை, வீடு கட்டுமிடம், பரிசுத்தமான இடம்.

97. ஆயாஸ: = முயற்சி, சோர்வு, மனவேதனை.

98. ஆரோபணம் = ஒன்றின் மீது வைத்தல், ஸ்தாபித்தல், செடி நடுதல், வில்லின் நாண் ஏற்றுதல்.

99. ஆர்ஜவம் = தெளிவு, நேர்மை, எளிமை.

100. ஆர்யா: = எஜமானன், பூஜிக்கத் தகுந்தவன், நல்ல ஒழுக்கம் உடையவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *