190. ஸம்ரக்ஷ: to ஸம்ஸ்க்ருதம்

3781. ஸம்ரக்ஷ: = ஸம்ரக்ஷணம் = மேற்பார்வை, பாதுகாப்பு.

3782. ஸம்ரம்ப4: = ஆரம்பம், தீவிரம், ஊக்கம், ஆசை, கோபம், வெறுப்பு, பகைமை, கர்வம், பரபரப்பு, குழப்பம்.

3783. ஸம்லக்3ன = இணைந்த, ஒன்று சேர்ந்த, ஒட்டிய.

3784. ஸம்லாப4: = பேச்சு வார்த்தை, உரையாடல், ரஹசிய சம்பாஷணை.

3785. ஸம்வத்ஸர: = வருடம், ஆண்டு.

3786. ஸம்வர்த்த: = திருப்புதல், பிரளயம், அழிவு, மேகம், வருடம், கூட்டம், சேர்க்கை.

3787. ஸம்வாத3: = சொற்போர், சர்ச்சை, செய்தி, ஒப்பு, சம்பாஷணை.,

3788. ஸம்வித்3 = அறிவு, உணர்வு, புத்தி, வாக்களிப்பு, ஒப்புதல், வழக்கம், போர், சண்டை, குறி, தியானம், நட்பு.

3789. ஸம்விதா4னம் = ஒழுங்கு, அமைப்பு, பழக்கம், முறை, செயல், காரியம்.

3790. ஸம்வ்ருத = மூடப்பட்ட, மறைக்கப்பட்ட, ரஹசியமான, அடைக்கப்பட்ட, சுருக்கப்பட்ட, முடிக்கப்பட்ட.

3791. ஸம்வேச’: = ஆசனம், கனவு, தூக்கம், இளைப்பாறுதல், படுத்திருத்தல், புணர்ச்சி.

3792. ஸம்ச’ய: = சந்தேகம், நிச்சயமற்ற தன்மை, அவநம்பிக்கை, அபாயம்.

3793. ஸம்ச்’ரய: = இருப்பிடம், புகலிடம், இளைப்பாறும் இடம், உதவியளிக்கும் இடம்.

3794. ஸம்ஸர்க3: = சேருதல், கூடுதல், தொடர்பு, அருகாமை, தொடுதல், பரிச்சயம், புணர்ச்சி.

3795. ஸம்ஸார: = உலகம், போக்கு, வழி, பல பிறவிகள், உலகைப் பற்றிய பிரமை, உலகப் போக்கு.

3796. ஸம்சித்3தி4 : = காரிய சித்தி, மோக்ஷம், இயற்கை.

3797. ஸம்ஸ்ருதி: = வழி, போக்கு, நீரோட்டம், உலகவாழ்க்கை.

3798. ஸம்ஸ்ருஷ்டி: = தொடர்பு, சேர்க்கை, கூட்டு, சேர்த்தல்.

3799. ஸம்ஸ்கார: = செய்து முடித்தல், சுத்தப்படுத்துதல், கல்வி அளித்தல், பயிற்சி அளித்தல், சமைத்தல், மத சம்பந்தமான சடங்குகள், புனித காரியம், ஈமச் சடங்கு.

3800. ஸம்ஸ்க்ருதம் = சமஸ்கிருதம் என்னும் மொழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *