48. த3ண்ட3ப்ரமாண: to த3ரத்3

941. த3ண்ட3ப்ரமாண: = சாஷ்டாங்க நமஸ்காரம்.

942. த3ண்டி3ன் = தண்டம் ஏந்திய துறவி, காவலாளி, படகோட்டி, யமன், அரசன்.

943. த3த்த = கொடுக்கப்பட்ட, அளிக்கப்பட்ட, வைக்கப்பட்ட.

944. த3த்தக: = சுவீகாரப் பிள்ளை.

945. த3தி4 = தயிர், துணி, சாலமரப் பிசின்.

946. த3ந்த: = பல், யானைதந்தம், அம்பின் நுனி, குன்று, மலையுச்சி.

947. த3ந்தாத3ந்தி = பற்களைக் கடித்துப் போடும் சண்டை.

948. த3ந்தாவல: = த3ந்தின் = யானை.

949. த3ம் = பழக்கப்பட, வசமாக்க, பழக்க, ஜெயிக்க, அமைதியாக்க.

950. த3ம: = தன்னடக்கம், மனவலிமை, சேறு, தண்டனை.

951. த3மனம் = பழக்குதல், வசம் ஆக்குதல், தண்டித்தல், அடித்தல்.

952. த3ம்பதி = கணவன், மனைவி.

953. த3ம்ப4: = வஞ்சனை, கர்வம், வச்சிராயுதம், ஏமாற்றுதல்.

954. த3யா = இரக்கம், கருணை, அருள்.

955. த3யாளு = இரக்கம் உடைய, தயை உடைய.

956. த3யித: = கணவன்.

957. த3யிதா = மனைவி.

958. த3ர: = பயம், நடுக்கம், குளம், குகை, பொந்து, சங்கு.

959. த3ரணி: = சுழல், அலை, நீரின் ஓட்டம், உடைத்தல்.

960. த3ரத்3 = இதயம், மலை, நீட்டிக்கொண்டிருக்கும் பாறை, கரை, ஓரம், பயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *