47. த்ரிச’ங்கு: to த3ண்ட3பாணி

921. த்ரிச’ங்கு: = ஓர் அரசனின் பெயர், சாதகப் பறவை, பூனை, மின்மினி.

922. த்ரிம்ச’ = முப்பதாவது.

923. த்ரிம்ச’த் = முப்பது.

924. த்ருட் = கிழிக்க, உடைக்க, துண்டாக்க, தூளாக்க.

925. த்ரைகாலிக = மூன்றுகாலங்களுடன் (இறந்த, நிகழ், எதிர்) தொடர்புடைய.

926. த்ரைகு3ண்யம் = மூன்று மடங்கு, முக்குணங்களின் சேர்க்கை.

927. த்ரைமாஸிக = மூன்ற மாதங்களுக்கு ஒருமுறை.

928. த்ரைவித்3யம் = மூன்று வேதங்கள் (ருக், யஜுர், ஸாம)

929. தவச் = மனிதனின் தோல், மரவுரி, பசு / மான் / புலித்தோல்.

930. த்வரித = சீக்கிரமான, வேகமான.

931. த்வாத்ருச’ = உன்னைப் போன்ற, உன் வகையான.

932. த்விஷ் = பிரகாசம், ஒளி, அழகு, அதிகாரம், சுமை, பளு, விருப்பம், பழக்கம், பேச்சு, தீங்கிழைத்தல்.

933. த2: = மலை, காப்பாளன்.

934. த2ம் = பயம், காத்தல்.

935. த3க்3த4 = எரிந்துபோன, சாம்பலான, பஞ்சமான, அமங்கலமான, காய்ந்த, போக்கிரியான.

936. த3ண்ட்3 = தண்டிக்க, தண்டனை கொடுக்க.

937. த3ண்ட3ம் = குச்சி, தடி, கழி, கதை, செங்கோல், துறவியின் தண்டம், யானையின் துதிக்கை, தாமரைத்தண்டு, கர்வம், உடல்.

938. த3ண்ட3த4ர: = அரசன், யமன், நீதிபதி.

939. த3ண்ட3நீதி = நீதி சாஸ்திரம், நீதி வழங்கல்.

940. த3ண்ட3பாணி = முருகன், யமன், போலீஸ்காரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *