46. த்ரிகோணம் to த்ரிவேணி

901. த்ரிகோணம் = முக்கோணம்.

902. த்ரிகு3ண = முப்பிரி, மும்முறை, மூன்று விதம், மூன்றுமடங்கு, முக்குணங்கள் (ரஜஸ், தமஸ், ஸத்வம் )

903. த்ரித3சா’: = முப்பது (33 )தேவர்கள்.

904. த்ரிதி3வம் = சுவர்க்கம், ஆகாயம்.

905. த்ரிதா4 = மூன்று பாகங்களாக.

906. த்ரிதா4மன் = மூன்று உலகங்களிலும் பிரகாசிப்பவன், விஷ்ணு, சிவன், அக்னி, யமன்.

907. த்ரிநயன: = த்ரிணயன: = த்ரி நேத்ர: = த்ரிலோசன: = சிவன்.

908. த்ரிபுட: = அம்பு, உள்ளங்கை, முழம், ஏழு அக்ஷரமுள்ள தாளம், கரை, குஹை.

909. திரிபுராந்தக: = த்ரிபுரஹர: = த்ரிபுராரி = சிவன்.

910. த்ரிபலீ = கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றின் சேர்க்கை.

911. த்ரிபு4வனம் = த்ரிலோகம் = மூன்று உலகங்கள்.

912. த்ரிமது4: = த்ரிமது4ரம் = பால், தேன், சர்க்கரை.

913. த்ரிமூர்த்தி = பிரமன், விஷ்ணு, சிவன் ஆகியவர்களின் ஒரே உருவம்.

914. த்ரியாமா = இரவு.

915. த்ரிராத்ரம் = மூன்று இரவுகளின் காலம், ஒரு யாகம்.

916. த்ரிலிங்க3: = மூன்று லிங்கங்கள் (ஸ்ரீ சைலம், த்ராக்ஷாராமம், காளஹஸ்தி)

917. த்ரிலோகீ = மூன்று உலகங்கள்.

918. த்ரிவர்க3: = அறம், பொருள், இன்பம்; ஸத்வம், ரஜஸ், தமஸ்.

919. த்ரிவிக்ரம: = விஷ்ணுவின் ஒரு அவதாரம்.

920. த்ரிவேணி = கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளின் சங்கமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *