45. த்ரூ to த்ராஸ:

881. த்ரூ = தாண்டிச்செல்ல, கடக்க, மிதக்க, நீந்த, ஜெயிக்க, நிரப்ப.

882. தேஜஸ் = கூர்மை, தீச்சுடர், வெப்பம், ஒளி, பிரகாசம், காந்தி, ஜோதி, வலிமை, சாமர்த்தியம், தைரியம், ஆன்ம பலம், மஹிமை, சாரம், சத்து, சக்தி, நெருப்பு, வேகம், புதிய வெண்ணை, தங்கம்.

883. தேஜஸ்வின் = பிரகாசமான, பளபளப்புள்ள, சக்திவாய்ந்த, வீரம் பொருந்திய, நன்கு அறியப்பட்ட, கௌரவமான, புகழுள்ள.

884. தேஜோமய = புகழுள்ள, பிரகாசிக்கும்.

885. தைஜஸ் = உலோகப்பொருளால் ஆன, சுறுசுறுப்பான, ஆசை கொண்ட, சக்தியுள்ள, வலிமையுள்ள.

886. தைலம் = எண்ணெய், சாம்பிராணி.

887. தோகம் = சந்ததி, குழந்தை.

888. தோடக: = வெண் கடுகு, சங்கராச்சாரியாரின் சீடர்.

889. தோமர: = தோமரம் = இரும்புத் தடி, ஈட்டி.

890. தோயம் = ஜலம், நீர், தண்ணீர்.

891. தோயகர்ப4 : = தேங்காய்.

892. தோயாத3: = மேகம்.

893. தோரணம் = வளைவு அமைக்கப்பட்ட வாயில், அலங்கரிக்கப்பட்ட வாயில், நுழை வாயில்.

894. தோஷணம் = மகிழ்ச்சி, திருப்தி படுத்துதல்.

895. த்யஜ் = விட்டுவிட, தள்ளிவிட, தியாகம் செய்ய, தவிர்க்க, விடுபட, தள்ளிவைக்க.

896. த்யக்த = தள்ளப்பட்ட, கை விடப்பட்ட, தவிர்க்கப்பட்ட.

897. த்யாக3: = விடுதல், தள்ளுதல், தியாகம் செய்தல், ராஜினாமா செய்தல், தானம் செய்தல், உதவுதல்.

898. த்ரயீ = மூன்று, மூன்று மடங்கு, மூன்று விதமான, புத்தி, மூன்று வேதங்கள் ( ருக், யஜுர், ஸாம)

899. த்ராணம் = காத்தல், தன்னைக் காப்பற்றிக் கொள்ளுதல், உதவி, புகலிடம்.

900. த்ராஸ: = பயம், கவலை, விலை உயர்ந்த மணிகளில் உள்ள தோஷங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *