44. துமுலம் to த்ருஷ்ணா

861. துமுலம் = கலவர சப்தம் , கூச்சல், ஆரவாரம், குழப்பம் .

862. துரங்க3: = துரங்க3ம் = குதிரை.

863. துர்ய = துரீய = நான்காவதான.

864. துர்யம் = துரீயம் = ஆத்மாவின் நான்காவது நிலை, பிரமத்துடன் இணைந்த நிலை.

865. துலனம் = எடை, ஒப்பிடுதல், எழுப்பி நிறுத்துதல், உவமை தருதல்.

866. துலா = தராசு, துலா ராசி.

867. துலாகோடீ = பெண்கள் அணியும் சலங்கை, கொலுசு.

868. துலாபா4ர: = மனிதனின் எடைக்குச் சமமாக வேறு ஒரு பொருளை நிறுத்துதல்.

869. துல்ய = ஒப்பான, ஒரே விதமான, ஒரே வகையான, தகுதியுள்ள.

870. துல்யம் = ஒரே காலத்தில், ஒரே ரீதியில்.

871. துஷார: = மூடு பனி, குளிர், பனிக்கட்டி, பனி, ஒரு வகைக் கர்ப்பூரம்.

872. துஷ்டி: = மகிழ்ச்சி, சந்தோஷம், திருப்தி.

873. துஹின = குளிரான, சீதளமான.

874. தூர்ண = வேகமான, துரிதமான, விரைந்து செல்லும்.

875. தூலம் = விண்வெளி, ஆகாயம், காற்று, புல்கட்டு, முசுக்கட்டை மரம்.

876. தூஷ்ணீம் = மெளனமாக, சப்தம் செய்யாது, பேசாது.

877. த்ருணம் = புல், புற்கதிர், நாணல், வைக்கோல், அற்பமானது.

878. த்ருதீயம் = மூன்றில் ஒரு பங்கு.

879. திருப்தி: = சந்தோஷம், திருப்தி, மகிழ்ச்சி, திகட்டல்.

880. த்ருஷ்ணா = தாகம், ஆவல், ஆசை, பேராசை, விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *